ஒல்லி உடம்பு, அப்போவே சொன்னேன் கேட்கல! பாண்டியாவின் காயத்தை அப்போதே கணித்த பாக் ஜாம்பவான்

Hardik Pandya
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெற்ற 29-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை புரட்டி எடுத்த குஜராத் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 169/5 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக பார்முக்கு திரும்பிய இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் 73 (48) ரன்கள் குவிக்க அம்பத்தி ராயுடு 46 (31) ரன்கள் எடுத்தார். குஜராத் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

Ruturaj gaikwad 73

- Advertisement -

அதை தொடர்ந்து 170 என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு சுப்மன் கில் 0 (1), விஜய் சங்கர் 0 (2), சஹா 11 (18), அபினவ் மனோகர் 12 (12) என டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சென்னையின் அற்புதமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். இதனால் 48/4 என தடுமாறிய குஜராத்தை அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தனி ஒருவனாக முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளும் சிக்சர்களுமாக சரமாரியாக அடித்தார்.

கலக்கும் குஜராத்:
அவருக்கு உறுதுணையாக கடைசி நேரத்தில் யாருமே எதிர்பாராத வண்ணம் பட்டய கிளப்பிய ரசித் கான் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 40 (21) ரன்கள் எடுத்து தனது வேலையை முடித்து அவுட்டானர். மறுபுறம் தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து சென்னையை புரட்டிய டேவிட் மில்லர் 51 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் உட்பட 94* ரன்கள் குவித்து மிரட்டலான பினிஷிங் கொடுத்தால் 19.5 ஓவர்களில் 170/7 ரன்களை எடுத்த குஜராத் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதை வெல்ல இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 5-வது வெற்றியைப் பதிவு செய்த குஜராத் புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஜொலிக்கிறது.

David Miller vs CSK

மறுபுறம் நடப்பு சாம்பியன் என்ற பெயருடன் விளையாடி வரும் சென்னை இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் திண்டாடுகிறது. தற்போதைய நிலைமையில் அந்த அணி இனிமேல் பிளே-ஆப் சுற்றுக்கு செல்வது சாத்தியமாகியுள்ளது. முன்னதாக நேற்றைய போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அப்போதே எச்சரித்தேன்:
இருப்பினும் அவருக்கு பதிலாக கேப்டனாக செயல்பட்ட ரசித் கான் அந்த பொறுப்பை சீரும் சிறப்புமாக செய்தது மட்டுமல்லாமல் பேட்டிங்கில் 40 ரன்கள் குவித்து டேவிட் மில்லருடன் இணைந்து பாண்டியா இல்லாத குறையை நிவர்த்தி செய்து வெற்றியை தேடி தந்தார். ஆனால் இது போன்ற காயம் கண்டிப்பாக வரும் என்று பாண்டியாவை முன்கூட்டியே எச்சரித்ததாக பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியுள்ளார்.

இதுபற்றி நேற்றைய போட்டி துவங்குவதற்கு முன்பாக அவர் பேசியது பின்வருமாறு. “ஒருமுறை துபாயில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரிடம் நீங்கள் பறவைகளை போல மிகவும் ஒல்லியாக இருக்கிறீர்கள் என்று கூறினேன். அவர்களிடம் வலுவான தசைகள் இல்லை. இப்போது கூட எனது பின் தோள்பட்டை பகுதிகளில் நல்ல தசைகள் உள்ளது. அந்த சமயத்தில் ஹர்திக் பாண்டியாவின் கை தசைகளை பிடித்துப் பார்த்தபோது அது மிகவும் ஒல்லியாக இருந்தது. எனவே இதுபோன்ற குறைவான தசைகள் காயத்தை ஏற்படுத்த வல்லது என்று அப்போதே எச்சரித்தேன். இருப்பினும் நான் நிறைய கிரிக்கெட் விளையாடுகிறேன் என்பதால் காயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராது என்று அவர் கூறினார். ஆனால் அந்தப் போட்டியிலேயே அவர் காயமடைந்தார்” என தெரிவித்தார்.

- Advertisement -

கடந்த வருடம் துபாயில் நடந்த ஐபிஎல் தொடரின் போது ஹர்திக் பாண்டியாவின் தசைகளை விளையாட்டாக தொட்டு பார்த்த போது அது மெல்லியதாக இருந்ததாக கூறும் சோயப் அக்தர் அது நிச்சயம் காயத்தை ஏற்படுத்தும் அன்றே தெரிவித்ததாகக் கூறினார். அந்த நிலையில் சொன்னது போலவே அதே போட்டியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் அதிலிருந்து குணமடைந்து இப்போதுதான் ஆல்-ரவுண்டராக அசத்தி வரும் நிலையில் மீண்டும் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Hardik Pandya GT Vs RR

கேப்டன் பாண்டியா:
இதற்கு முன் கேப்டன்ஷிப் அனுபவம் இல்லாத போதிலும் இதுவரை பேட்டிங்கில் 228 ரன்களும் ஒரு சில முக்கிய விக்கெட்டுகளையும் எடுத்து அற்புதமான ஆல்ரவுண்டராகவும் கேப்டனாகவும் குஜராத்தை வழிநடத்தி வரும் பாண்டியா வருங்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக வருவார் என்று சோயப் அக்தர் கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “ஹர்டிக் பாண்டியா இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய பிராண்டாக வருவார். அவர் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக தன்னை அடையாளப்படுத்த முயற்சித்து வருகிறார்.

இதையும் படிங்க : அவர்கிட்ட ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு ஆனால் பினிஷிங் மோசம் – நட்சத்திர வீரரை விளாசும் ஆகாஷ் சோப்ரா

அதிலும் இப்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக அசத்த தொடங்கியுள்ள அவர் வருங்காலத்தில் தம்மால் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட முடியும் என இந்திய நிர்வாகத்திற்கு காட்டியுள்ளார். அந்த வகையில் வருங்காலத்தில் அவர் இந்திய அணியின் டி20 கேப்டனாக வருவதற்கு நான் மிகவும் ஆசைப்படுகிறேன்” என தெரிவித்தார்.

Advertisement