எஞ்சிய ஐ.பி.எல் தொடரில் எங்கள் அணியின் 2 கீ பிளேயர்கள் விளையாடாதது எங்களுக்கு பின்னடைவு – மெக்கல்லம் பேட்டி

- Advertisement -

கொரானா பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை, இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஐக்கிய அமீரகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல்லின் இரண்டாவது பாதியில் எங்களது அணியில் மிக முக்கியமான இரண்டு வீரர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்பது எங்களுக்கு மிக அதிகமான வருத்தத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ப்ரென்டன் மெக்கல்லம். இதுகுறித்து பேசியுள்ள அவர்,

Morgan

- Advertisement -

செப்டம்பரில் தொடங்கப் போகும் ஐபிஎல்லின் இரண்டாவது பாதியில் எங்களது அணியின் மிக முக்கியமான வீரர்களான பேட் கம்மின்ஸும், அணியின் கேப்டனுமான இயான் மோர்கனும் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிகிறது. இது எங்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அவர்களுடைய இடங்களை இந்திய இளம் வீரர்களுக்கு அளிக்கலாம் என இருக்கிறோம் என்று அவர் கூறினார். எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நடைபெற்றால் இங்கிலாந்து நாட்டு வீரர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று ஏற்கனவே அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதால், இங்கிலாந்து வீரரான இயான் மோர்கன் நிச்சயமாக கொல்கத்தா அணியில் விளையாட மாட்டார் என்றே தெரிகிறது.

அந்த அணியின் மற்றொரு வீரரான ஆஸ்திரேலிய நாட்டைச் சார்ந்த பேட் கம்மின்சின் முடிவு இன்னும் தெளிவாக தெரியவில்லை. அவர்கள் நாட்டு வீரர்கள் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வது குறித்து ஆலோசனை செய்துதான் முடிவெடுப்போம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்தப் பேட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்து மேலும் பேசிய மெக்கல்லம், அணிக்குள் விளையாட வாய்ப்பளிக்கப்பட இருக்கும் இந்திய இளம் வீரர்கள் அணியின் பொறுப்பை கையாளும் அளவிற்கு இன்னும் தயாராக இல்லையென்று தெரியும்.

cummins

ஆனால் சுப்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா போன்றவர்களும் இதுபோன்று இருந்துதான் அணியின் முக்கியமான வீரர்களாக வளர்ந்துள்ளனர். எனவே அவர்களைப் போல இன்னும் சில வீரர்களை உருவாக்கும் முயற்சியில் நானும் இருக்கிறேன் என்பதை நினைத்து பெருமை அடைகிறேன். இந்த தொடரில் எங்களது அணி திறமையான வீரர்களை கொண்டிருந்தும் படுமோசமாக விளையாடி இருக்கிறது என்று பலரும் கூறுகிறார்கள். அந்த கருத்து உண்மையானது தான். நானும் அதை ஏற்றுக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

rana

29 போட்டிகள் மட்டுமே முடிந்துள்ள இந்த ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

Advertisement