தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பதவியில் ஏற்பட்டுள்ள சிக்கல். பஞ்சாயத்தை முடித்துவைத்த மெக்கல்லம் – விவரம் இதோ

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பல முக்கிய வீரர்களை அணியில் வைத்து இருந்தும் கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத கொல்கத்தா அணி மீது விமர்சனம் எழுந்தது. மேலும் அந்த அணியின் துணை கேப்டனாக ராபின் உத்தப்பாவிற்கும் தினேஷ் கார்த்திக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

Karthik

மேலும் கடந்த சீசனில் களத்தில் துணைக்கேப்டன் என்றுகூட பாக்காமல் உத்தப்பாவை அவமதித்தது போன்ற செயல்களையும் நாம் பார்த்தோம். அது மட்டுமின்றி இந்த ஆண்டுக்கான கொல்கத்தா அணியில் இருந்து உத்தப்பா அதிரடியாக கழற்றி விடப்பட்டார். மேலும் கொல்கத்தா அணிக்கு புதிய பயிற்சியாளராக மெக்கல்லம் ஒப்பந்தம் ஆனார்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் வீரர்களின் ஏலம் நேற்று முடிவடைந்தது. இந்த ஏலத்தில் இங்கிலாந்து அணியின் உலக கோப்பை வெற்றி கேப்டன் இயான் மோர்கன் கொல்கத்தா அணியால் 5.5 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டார். இந்நிலையில் உலக கோப்பை வென்ற கேப்டனை அணிக்கு கேப்டனாக நியமிப்பதா ? அல்லது கடந்த இரண்டு ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டுவரும் தினேஷ் கார்த்திக்கை தொடர வைப்பதா ? என்ற கேள்வி எழுந்தது.

Karthik

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் ஏற்பட்ட இந்த புதிய தலைவலியை நிவர்த்தி செய்யும் விதமாக அந்த அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம் மற்றும் கேப்டன்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தான் மோர்கனை கொல்கத்தா அணியில் வாங்கினோம். அவரின் தேர்வு நிச்சயம் கொல்கத்தா அணிக்கு பலம் அளிக்கும்.

- Advertisement -

Karthik 1

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியை சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து வழிநடத்தி வருகிறார். எனவே அவர் இந்த ஆண்டும் கொல்கத்தா அணியின் கேப்டனாக தொடர்வார் அவருக்கு உதவியாக மோர்கன் ஆலோசனைகளை வழங்குவார் என்றும் பயிற்சியாளர் மெக்கல்லம் பேட்டியில் தெரிவித்தார். இதன் மூலம் இந்த வருடமும் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.