இவர் மட்டும் இருந்திருந்தா இந்திய அணி நியூஸிலாந்திடம் இவ்வளவு மோசமாக தோற்றிருக்காது – மெக்லனகன் கருத்து

Mcclenaghan-1

இந்திய அணி சமீபத்தில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து ஒருநாள் தொடரையும், டெஸ்ட் தொடரையும் அடுத்தடுத்து இழந்து அதிர்ச்சி அளித்தது.

Williamson-1

மேலும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் தோல்வி அடைந்ததால் இந்திய அணி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. மேலும் கோலியின் கேப்டன்சி இந்த விடயத்தில் அடிவாங்கியது. இந்நிலையில் தற்போது நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மெக்கலனகன் ஒரு கருத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது : ரோகித் சர்மா மட்டும் காயம் காரணமாக வெளியேறாமல் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி இருந்தால் நிச்சயம் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் மோசமாக இழந்திருக்காது.

rohith 6

மேலும் ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கும் .அவரின் துவக்கம் எப்போதும் இந்திய அணிக்கு ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை அளித்துள்ளது. அதனால் நிச்சயம் இந்திய அணி இந்த அளவிற்கு ஆட்டம் கண்டிருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அவர் குறிப்பிட்டது போல டி20 தொடரில் ரோஹித்தின் ஆட்டம் இந்திய அணிக்கு பெரிதும் கைகொடுத்தது. அதனால் இந்திய அணி நியூசிலாந்தை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து பாதியில் வெளியேறிய ரோகித் சர்மா இந்தியா திரும்பினார். மேலும் தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாட இருந்த ரோகித் கொரோனா பாதிப்பின் காரணமாக ஐபிஎல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

ரோஹித் பற்றி கருத்து கூறிய மெக்லனகன் ரோஹித் சர்மாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே அவர் ரோஹித்தை புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் ஒரு கேப்டனாக ரோஹித்தை சிறந்தவர் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.