இந்தியாவுக்காக ஆடுவதே என்னோட லட்சியம்.. 155 கி.மீ வேகத்துக்கு அந்த 3 விஷயம் ஹெல்ப் பண்ணுது.. மயங் பேட்டி

Mayank Yadav 6
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் இரண்டாம் தேதி நடைபெற்ற 15வது லீக் போட்டியில் பெங்களூருவை 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வீழ்த்தியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 181/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 81 (56), நிக்கோலஸ் பூரான் 40* (21) ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

பின்னர் 182 ரன்களை துரத்திய பெங்களூரு ஆரம்பம் முதலே லக்னோவின் தரமான பந்து வீச்சில் திணறலாக விளையாடி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. விராட் கோலி, கேப்டன் டு பிளேஸிஸ், மேக்ஸ்வெல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்து அந்த அணிக்கு அதிகபட்சமாக மகிபால் லோம்ரர் 33 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

மிரட்டல் நாயகன்:
மறுபுறம் அசத்தலாக பந்து வீசிய லக்னோ சார்பில் அதிகபட்சமாக மயங் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதனால் 3 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்த லக்னோ புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் சொந்த மண்ணில் இரண்டாவது தோல்வியை பதிவு செய்த பெங்களூரு 9வது இடத்திற்கு சரிந்தது.

இந்த வெற்றிக்கு 4 ஓவரில் வெறும் 14 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய மயங் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார். சொல்லப்போனால் கடந்த போட்டியிலும் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் 155.0 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து பந்து வீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவுக்காக விளையாடுவதே தம்முடைய லட்சியம் என்று தெரிவிக்கும் அவர் கட்டுப்பாடான உணவு, தூக்கம், கடுமையான பயிற்சி ஆகியவையால் தான் தம்மால் இவ்வளவு வேகத்தில் வீச முடிவதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2 போட்டிகளில் 2 ஆட்டநாயகன் விருது வென்றுள்ளது நல்ல உணர்வை கொடுக்கிறது. அந்த இரண்டிலும் நாங்கள் வெற்றி பெற்றதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்”

இதையும் படிங்க: 155 கி.மீ வேகத்தில் மேக்ஸ்வெல், க்ரீனை தெறிக்க விட்ட மயங் யாதவ்.. 2வது போட்டியிலேயே சரித்திர சாதனை

“நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாகும். அந்தப் பயணத்தில் இது வெறும் துவக்கம் என்று நான் உணர்கிறேன். கேமரூன் கிரீன் விக்கெட்டை எடுத்ததை நான் சிறப்பானதாக கருதினேன். வேகமாக பந்து வீசுவதற்கு கட்டுப்பாடான உணவுகள் (டயட்), தூக்கம் மற்றும் பயிற்சி போன்ற பல்வேறு அம்சங்கள் முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக என்னுடைய டயட்டில் அதிக கவனம் செலுத்தும் நான் போட்டி முடிந்ததும் தண்ணீர் குளியல் போட்டு புத்துணர்ச்சியடைவதில் கவனம் செலுத்துகிறேன்” என்று கூறினார்.

Advertisement