155 கி.மீ வேகத்தில் மேக்ஸ்வெல், க்ரீனை தெறிக்க விட்ட மயங் யாதவ்.. 2வது போட்டியிலேயே சரித்திர சாதனை

Mayank Yadav 6
- Advertisement -

ஐபிஎல் 20204 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் இரண்டாம் தேதி நடைபெற்ற 15வது லீக் போட்டியில் பெங்களூருவை 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. பெங்களூருவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 181/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக 81 (56) நிக்கோலஸ் பூரான் 40* (21) ரன்கள் எடுத்தனர்.

பின்னர் 182 ரன்களை சேசிங் செய்த பெங்களூரு ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. விராட் கோலி, மேக்ஸ்வெல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த அந்த அணிக்கு அதிகபட்சமாக மகிபால் லோம்ரர் 33 ரன்கள் எடுத்தார். லக்னோ சார்பில் அதிகபட்சமாக மயங் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

மிரட்டும் மயங்:
அதனால் 3 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்த லக்னோ புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 3 போட்டிகளில் அதுவும் சொந்த மண்ணில் 2வது தோல்வியை பதிவு செய்த பெங்களூரு 9வது இடத்திற்கு சரிந்தது. இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய மயங் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வருட ஐபிஎல் தொடரில் பஞ்சாப்புக்கு எதிரான கடந்த போட்டியில் 21 வயதாகும் அவர் லக்னோ அணிக்காக அறிமுகமாக களமிறங்கினார். அதில் ஷிகர் தவானுக்கு எதிராக 155.80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய அவர் 2024 ஐபிஎல் தொடரில் அதிவேகமான பந்தை வீசிய பவுலராக சாதனை படைத்தார். அதே வேகத்தில் அனல் பறக்க பந்து வீசி 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் பஞ்சாப்பை தோற்கடித்து லக்னோவின் முதல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

அதனால் டேல் ஸ்டைன், பிரட் லீ போன்ற ஜாம்பவான்களின் பாராட்டுகளை பெற்ற அவர் இந்த போட்டியிலும் ஆரம்பம் முதலே 145 – 150 கி.மீ வேகத்தில் பந்து வீசினார். அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திரம் கிளன் மேக்ஸ்வெலை டக் அவுட்டாக்கிய அவர் கேமரூன் கிரீனையும் கிளீன் போல்ட்டாக்கி மொத்தம் 4 ஓவரில் 14 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதையும் படிங்க: 28 ரன்ஸ்.. லக்னோ மிரட்டல் வெற்றி.. சொந்த மண்ணில் செஃல்ப் எடுக்காத ஆர்சிபி.. 2 பரிதாப சாதனை

அத்துடன் இப்போட்டியில் 156.70 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு பந்தை வீசிய அவர் ஐபிஎல் 2024 தொடரில் அதிவேகமான பந்தை வீசிய பவுலர் என்ற தன்னுடைய சொந்த சாதனையை (155.80) உடைத்தார். அதை விட இதுவரை வெறும் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 155+ கிலோமீட்டர் வேகத்தில் 3 பந்துகளை வீசியுள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 155க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் வேகப் பந்துகளை வீசிய பவுலர் என்ற புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. மயங் யாதவ் : 3* (2 போட்டிகளில்)
2. உம்ரான் மாலிக் : 2 (26 போட்டிகளில்)
3. அன்றிச் நோர்ட்ஜே : 2 (42 போட்டிகளில்)

Advertisement