லக்னோ அணியில் இணையும் அதிவேகப்புயல்.. தேசிய கிரிக்கெட் அகாடெமி காண்பித்த – கிரீன் சிக்னல்

Mayank Yadav
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது வருடா வருடம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் வேளையில் நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் போட்டி கடுமையாக இருந்து வருவதால் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த தொடரை கண்டுகளித்து வருகின்றனர்.

லக்னோ அணியில் இணையவுள்ள நட்சத்திர வீரர் :

அதே வேளையில் இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் ஒரு குறிப்பிட்ட சில அணிகளை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக விலகியது அந்த அணிகளுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ள வேளையில் காயம் குணமடைந்தும் சில வீரர்கள் இந்த தொடரில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சார்பாக அந்த அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான மாயங்க் யாதவ் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக அறிமுகமாகி 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும் தனது அதிவேகமான பந்துவீச்சால் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தார்.

மேலும் அந்த அசத்தலான செயல்பாட்டால் வெகு விரைவிலேயே இந்திய அணிக்காகவும் அறிமுகம் ஆகியிருந்தார். சர்வதேச போட்டிகளிலும் தனது மிகச் சிறப்பான பந்துவீச்சை அவர் வெளிப்படுத்திதால் இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

இதன் காரணமாக 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவரை 11 கோடி ரூபாய் என்கிற பெரிய தொகை கொடுத்து லக்னோ அணி தக்கவைத்தது. ஆனாலும் இந்த தொடருக்கு முன்னதாக ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் 2025 ஐ.பி.எல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட முடியவில்லை.

இதையும் படிங்க : ரோஹித் கிடையாது.. மும்பையின் அந்த வெற்றிக்கான பாராட்டுக்கு சொந்தக்காரர் அவர் தான்.. சஞ்சர் மஞ்ரேக்கர்

இந்நிலையில் தற்போது அவரது காயம் குணம் அடைந்து மீண்டும் விளையாடும் அளவிற்கு அவர் உடற்தகுதி அடைந்துவிட்டதாக தேசிய கிரிக்கெட் அகாடமி தற்போது அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் காரணமாக நாளை அவர் லக்னோ அணியுடன் இணைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement