அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்பாக வீரர்களின் மெகா ஏலமானது இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பின்படி ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களை தக்க வைக்கலாம் என்றும் அப்படி தக்கவைக்கப்படும் வீரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சம்பளத்தை நிர்ணயித்துள்ளது.
மாயங்க் யாதவிற்கு அடித்துள்ள ஜாக்பாட் :
அந்த வகையில் ஒவ்வொரு அணியும் முதலாவதாக தாங்கள் தக்கவைக்கும் வீரருக்கு 18 கோடி ரூபாயும், இரண்டாவதாக தக்கவைக்கும் வீரர்களுக்கு 14 கோடி ரூபாயும், மூன்றாவதாக தக்கவைக்கும் வீரர்களுக்கு 11 கோடி ரூபாயும் சம்பளம் வழங்க வேண்டும்.
அதேபோன்று நான்காவது தக்கவைக்கப்படும் வீரருக்கு 14 கோடி, ஐந்தாவதாக தக்கவைக்கப்படும் வீரருக்கு 11 கோடி ரூபாய் ஊதியம் தர வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் உள்ள முக்கிய வீரர்களை தக்க வைக்கும் நிர்பந்தத்தில் இருக்கும் வேலையில் லக்னோ அணிக்காக கடந்த ஆண்டு அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சாளர் என மாயங்க் யாதவ் நிச்சயம் அந்த அணியால் தக்க வைக்கப்படுவார் என்று தெரிகிறது.
ஏனெனில் கடந்த ஆண்டு அறிமுகமான அவர் மணிக்கு 156.7 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி அசத்தியிருந்தார். அதோடு தற்போது இந்திய அணிக்காகவும் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்த அவர் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து விசி அசத்தியிருந்தார்.
அதிவேகத்தில் பந்துவீசும் இவர் சிக்கனமாக ரன்களை கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்துவதால் நிச்சயம் லக்னோ அணி அவரை 3-ஆவது வீரராக அவரை தக்க வைக்க முடிவு செய்யும். அந்த வகையில் அவரை மூன்றாவது வீரராக அந்த அணி தக்கவைக்கும் பட்சத்தில் 11 கோடி ரூபாய் சம்பளம் வழங்க வேண்டிவரும். ஏனெனில் இந்திய அணிக்காக மாயங்க் யாதவ் தற்போது அறிமுகமாகிவிட்டதால் அவர் இனி 20 லட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
இதையும் படிங்க : 69 ரன்ஸ்.. 2வது முறை.. வெற்றி பெற்ற தெ.ஆ அணிக்கு வரலாற்று தோல்வியை பரிசளித்த அயர்லாந்து
குறைந்தபட்சம் 4 கோடி ரூபாயிலிருந்து அதிகபட்சம் 11 கோடி ரூபாய் வரை அவரது சம்பளம் அடுத்த ஆண்டு அதிகரிக்கும். அதே போன்று தற்போது இந்திய அணியில் உள்ள சீனியர் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் வேளையில் 22 வயதான அவர் இந்தியாவின் வருங்கால நட்சத்திரமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



