இதுபோன்ற மைதானத்தில் விளையாடுவதற்கு பதிலா வேடிக்கை பார்க்கலாம் – கடுப்பான இந்திய முன்னணி வீரர்

Agarwal-1
- Advertisement -

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 84 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார் . ஆனால் அவர் தனது விக்கெட்டை இழந்த விதம் மிகவும் மோசமானது . வெறுமனே சென்ற பந்தை அடித்து பீல்டரின் கையில் கொடுத்து விட்டு வெளியேறினார்.

Agarwal

- Advertisement -

இந்நிலையில் இது குறித்து பேசிய மயங்க் அகர்வால் கூறியதாவது : நியூசிலாந்து அணியின் ஜெமிசன் பிரமாதமாக பந்துவீசினார் . பந்து நன்றாக பவுன்ஸ் ஆனது. அதை பயன்படுத்தி சரியான இடத்தில் அவர் வீசிக்கொண்டே இருந்தார் . புதிய பந்தை வைத்து எங்களை தொந்தரவு செய்துகொண்டே இருந்தார். அவரது உயரத்தின மூலம் பந்து எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆனது.

காற்று கொஞ்சம் அதிகமாக அடித்தது. ஒவ்வொரு பத்துக்கும் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதாக இருந்தது. இதனால் நிலைத்து நின்று ஆட முடியவில்லை. இது போன்று ஆடுகளத்தில் பேட்ஸ்மேன் ரன்னர் முனையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார் மயங்க் அகர்வால். இந்த கருத்தின் மூலம் விளையாடுவதை விட வேடிக்கை பார்ப்பதே சிறந்தது என்பது போல கருத்தினை பகிர்ந்தார் அகர்வால்.

Agarwal

இந்த மைதானத்தில் போட்டியின் போது வீசிக்கொண்டிருக்கும் பலத்த காற்று அவ்வப்போது வெய்க்கெட்டுகள் விழ காரணமாக அமைவது மட்டுமின்றி வீரர்களை சிரமடுத்தி ஆட்டத்தின் நேரத்தையும் தாமதம் செய்கிறது என்றே கூறலாம்.

Advertisement