சேவாக் பாணியில் இரட்டை சதம் அடித்த அகர்வால். எப்படி அடித்தார் என்பதுதா ஹைலைட்டே – விவரம் இதோ

Sehwag
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது இரண்டாவது நாளாக இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் அணி 150 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இன்று இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்து இருந்தது.

Agarwal 1

- Advertisement -

அதனை தொடர்ந்து விளையாடிய அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மேலும் அவருக்கு உறுதுணையாக ஆடிவந்த ரஹானே சதத்தை நெருங்கி வந்தார். இந்திய அணி அதுவரை 2 ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்களை குவித்துள்ளது. தேநீர் இடைவெளிக்கு பிறகு சில ஓவர்களில் ரஹானே 86 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனால் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அகர்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது 2 ஆவது இரட்டை சதத்தை நிறைவு செய்தார். இந்த இரட்டை சதத்தில் என்ன ஸ்பெஷல் என்றால் 196 ரன்களில் இருந்த போது சிக்ஸர் அடித்து தனது இரைட்டை சதத்தை அகர்வால் நிறைவு செய்தார். இத்தகு முன்னர் பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் சேவாக் மட்டுமே இதுபோன்று சிக்ஸர் அடித்து சதங்களை நிறைவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Agarwal-2

இந்த இரட்டைசதத்தை மாயங்க் அகர்வால் அடிக்க 25 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களுடனும் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மூன்றுநாட்கள் ஆட்டம் இருப்பதால் இவருக்கு முச்சதம் அடிப்பதற்கு எளிமையான வாய்ப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement