ஒரே பந்தில் இத்தனை குழப்பமா? பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறிய அகர்வால் – நடந்தது என்ன?

Agarwal
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று மார்ச் 12-ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இத்தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கும் வேளையில் இன்று இரண்டாவது போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த படி தற்போது முதல் நாள் இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

agarwal 2

- Advertisement -

கடந்த போட்டியில் இந்திய அணியில் விளையாடிய ஜெயந்த் யாதவிற்கு பதிலாக அக்சர் பட்டேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதைத் தவிர இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. துவக்க வீரர்களாக மாயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா ஜோடி இந்த போட்டியிலும் களமிறங்கியது. கடந்த போட்டியில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாயங்க் அகர்வால் என்ற இரண்டாவது போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அகர்வாலுக்கு பெங்களூர் மைதானம் சொந்த மைதானம் என்கிற காரணத்தினால் அவர் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் ஏழு பந்துகளை சந்தித்த நிலையில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதேபோன்று கேப்டன் ரோகித் சர்மாவும் 25 பந்துகளை சந்தித்து 15 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

agarwal 1

இந்நிலையில் இந்த போட்டியில் மாயங்க் அகர்வால் அவுட்டான பந்தில் ஏகப்பட்ட விடயங்கள் ஒரே பந்தில் நிகழ்ந்து விட்டன என்று கூறலாம். ஏனெனில் அதன்படி இரண்டாவது ஓவரை இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான பெர்னாண்டோ வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தை சந்தித்த மாயங்க் அகர்வால் கால் பேடில் வாங்கினார். இதன் காரணமாக எல்பிடபிள்யூ அப்பீல் வலுவாக எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கு அம்பயர் அவுட் இல்லை என்று முடிவு செய்தார்.

- Advertisement -

அதற்குள் இலங்கை வீரர்கள் ரெவியூ எடுத்து விட்டனர். ஆனால் இப்படி சில சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒரு பக்கத்தில் மாயங்க் அகர்வால் தேவையில்லாமல் ஓடி ரன் அவுட் ஆனார். ரன் அவுட் ஆவதற்கு முன்னதாகவே ரிவ்யூ கேட்கப்பட்டதால் மூன்றாவது அம்பயரின் பார்வைக்கு இச்சம்பவம் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே வேளையில் அந்த பந்து நோபால் என்று அறிவித்ததால் ரிவ்யூ முறையில் அகர்வாலை பரிசோதனை செய்யவில்லை.

இதையும் படிங்க : நேரடியாக அக்சர் படேலுக்கு வாய்ப்பு வழங்க இதுவே காரணம் – டாஸிற்கு பிறகு ரோஹித் பேசியது என்ன?

இருப்பினும் ரன் அவுட் முறையில் அகர்வால் ஆட்டமிழந்து பரிதாபமாக வெளியேறினார். இப்படி பந்து எல்பிடபிள்யூ கேட்கப்படும் போது நோ பால் என்று அறிவிக்கப்பட்டாலும் பின்னர் அவர் ரன் அவுட் மூலம் ஆட்டம் இழந்து வெளியேறியது அதிக அளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement