நேரடியாக அக்சர் படேலுக்கு வாய்ப்பு வழங்க இதுவே காரணம் – டாஸிற்கு பிறகு ரோஹித் பேசியது என்ன?

Rohith-1
- Advertisement -

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்கியுள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் தற்போது இந்த இரண்டாவது போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது .

Rohith

- Advertisement -

அந்த வகையில் கடந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியிலிருந்து ஜெயந்த் யாதவ் மட்டும் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதலாவது டெஸ்ட் போட்டியின்போது மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக விளையாடிய ஜெயந்த் யாதவ் அந்த டெஸ்ட் போட்டியில் முழுவதுமாக 20 ஓவர்கள் கூட வீசவில்லை. அதோடு சேர்த்து அவர் விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை.

இதன்காரணமாக இந்த போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முதல் போட்டியை காயம் காரணமாக தவறவிட்ட அக்சர் பட்டேல் நேரடியாக அணியில் இணைந்துள்ளார். இந்நிலையில் அக்சர் பட்டியலில் இந்த சேர்க்கை குறித்து டாஸிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் சில விடயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

axar

அக்சர் படேல் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய போட்டியில் விளையாடும் அளவிற்கு அவர் உடற்தகுதியுடன் இருப்பதனால் இந்த போட்டியில் அவர் அணியில் சேர்க்கப்பட்டு ஜெயந்த் யாதவ் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த முடிவுகள் சூழ்நிலையை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

மேலும் அக்ஷர் பட்டேல் அணியில் சேர்ப்பதற்கான முக்கிய காரணம் குறித்து பேசிய ரோகித் சர்மா : அக்ஷர் பட்டேல் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்த வரை எவ்வாறு விளையாடி உள்ளார் என்பது நாம் அறிந்ததே. இந்தியாவில் நடைபெற்ற கடைசி தொடரில் அவர் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாகவே அவருக்கு நேரடியாக வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்று ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : 2 ஆவது டெஸ்ட் : டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங். அணியில் ஒரு மாற்றம் – ரோஹித் அறிவிப்பு

ரோஹித் கூறியது போலவே அக்சர் பட்டேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு அறிமுகமாகி தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 5 டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ள அவர் 10 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 5 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது மட்டுமின்றி மொத்தமாக 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே அக்சர் படேலின் சேர்க்கை நிச்சயம் இந்திய அணிக்கு பலம் அளிக்கும் என்றே கூறலாம்.

Advertisement