2 ஆவது டெஸ்ட் : டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங். அணியில் ஒரு மாற்றம் – ரோஹித் அறிவிப்பு

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சில நிமிடங்களுக்கு முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டிக்கு முன்னதாக மொகாலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்திருந்தது.

INDvsSL cup

- Advertisement -

மொஹாலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஏற்கனவே தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வைக்கும் வேளையில் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்ற ஆவலாக உள்ளது.

அதே போன்று இலங்கை அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய உத்வேகம் காட்டும் என்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில நிமிடங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த டாஸிற்கு பிறகு டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

Jayant 1

மேலும் அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசிய அவர் அக்சர் படேல் இன்றைய போட்டியில் விளையாடும் அளவிற்கு உடற்தகுதியுடன் இருப்பதால் அவர் அணியில் இணைகிறார் என்றும் அதன்காரணமாக ஜெயந்த் யாதவ் அணியில் இருந்து வெளியேறுகிறார் என்றும் அறிவித்தார்.

- Advertisement -

அதன்படி தற்போது இந்திய அணி தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இன்றைய 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ப்ளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஜடேஜாவை மட்டும் பி.சி.சி.ஐ எப்போதுமே ஒதுக்குகிறது. அவங்க செய்றது தப்பு – கண்டனத்தை தெரிவித்த சோப்ரா

1) மாயங்க் அகர்வால், 2) ரோஹித் சர்மா, 3) ஹனுமா விஹாரி, 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) ரிஷப் பண்ட், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) அக்சர் படேல், 10) பும்ரா, 11) முகமது ஷமி

Advertisement