இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த மாயங்க் அகர்வால் – விவரம் இதோ

Agarwal-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. நேற்று முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக தேனீர் இடைவேளையின்போது நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்தது.

ind

- Advertisement -

ரோகித் 115 ரன்களுடனும் அகர்வால் 84 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்த இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்தனர். இரண்டாம் நாளான இன்று தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 454 ரன்களை குவித்துள்ளது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர். ரோகித்சர்மா 176 ரன்களில் இருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அகர்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் இரட்டை சதத்தை அடித்து சாதனை படைத்தார்.

agarwal 3

இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் இதுவே அவர் இந்திய மண்ணில் ஆடும் முதல் டெஸ்ட் போட்டியாகும். இதனால் இந்திய மண்ணில் விளையாடிய முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும் 371 பந்துகளைச் சந்தித்த அவர் 215 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு தற்போது இந்திய அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 454 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Advertisement