இந்த ஐ.பி.எல் தொடரில் விராட் கோலியிடமிருந்து இந்த விஷயத்தை கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளேன் – மேக்ஸ்வெல்

Maxwell

இந்த ஆண்டு நடைபெற உள்ள 14வது ஐபிஎல் தொடர் முழுவதுமாக இந்தியாவில் நடத்த பிசிசிஐ மும்முரமான திட்டங்களை வகுத்து வருகிறது. அதன்படி இந்த ஏப்ரல் மே மாதங்களில் திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர் நடைபெறும் என்றும் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த ஆண்டிற்கான வீரர்களின் மினி ஏலமும் சென்னையில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை விலைக்கு வாங்கினர்.

அதில் எப்பொழுதும் கோப்பையை வெல்லும் கனவோடு இறங்கும் ஆர்சிபி அணி மிகப்பெரிய தொகைக்கு ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லை 14.2 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. ஆனால் அவர் கடந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 106 ரன்களை மட்டுமே மேக்ஸ்வெல் அடித்து இருந்ததால் அவர் மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டு இருந்த வேளையிலும் அவருக்கான ஏலத்தொகை மிகப்பெரியதாக இருந்தது.

அனைத்து அணிகளும் அவரை ஏலத்தில் எடுக்க போட்டி போட இறுதியில் ஆர்சிபி அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் முதல்முறையாக விராட் கோலியின் தலைமையின் கீழ் விளையாடுவது குறித்து பேசிய அவர் : கிரிக்கெட் உலகத்தில் உச்சத்தில் உள்ள விராட் கோலி டெஸ்ட் மட்டுமின்றி ஒருநாள், டி20 என அனைத்து போட்டியிலும் சிறப்பாக விளையாடக் கூடிய வீரராவார்

maxwell 1

பன்முக திறமை வாய்ந்த அவரின் கீழ் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சி என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் எந்த போட்டியும் போட்டியாக இருந்தாலும் அதற்கு ஏற்றவாறு தன்னை புகுத்திக் கொண்டு விளையாடுவதில் கோலி வல்லவர் என்றும், நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடும் திறமைமிக்க வீரர் அவர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Maxwell

மேலும் நெருக்கடியான சூழலில் கேப்டனாக அவர் கையாளும் சிறப்பான சில யுக்திகளை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளவும், அவரின் தலைமைப் பண்பை கற்றுக் கொள்ளவும் விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் தொடரில் அவர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.