பெங்களூரு அணியில் எனது சிறப்பான ஆட்டத்திற்கு இதுவே காரணம் – மேக்ஸ்வெல் ஓபன்டாக்

Maxwell

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிளன் மேக்ஸ்வெல் பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் பெரிய அளவில் அவரால் ரன்கள் குவிக்க முடியவில்லை. மேலும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக அவர் தடுமாறி வந்தாலும் அவரது அதிரடியான பேட்டிங் காரணமாகவும் அவர் ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் என்ற காரணத்திற்காகவும் அவரை ஒவ்வொரு ஆண்டும் முன்னணி அணிகள் ஏலத்தில் எடுக்க போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நிற்கின்றன.

maxwell

அந்த வகையில் கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு பெங்களூரு அணி அவரை எதிர்த்து பெரிய தொகைக்கு எடுத்தது. கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை உணர்ந்த மேக்ஸ்வெல் இம்முறை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக விருந்து படைத்து வருகிறார்.

இந்நிலையில் மேக்ஸ்வெல் இவ்வாறு ஆர்சிபி அணியில் மட்டும் சிறப்பாக விளையாடுவது குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் என்னுடைய பயணத்தில் முதல் நாளில் இருந்தே வீட்டில் இருப்பது போன்ற உணர்வு எனக்கு இருந்தது.

maxwell

இந்த அணியில் உள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் என அனைவரும் சிறப்பாக என்னுடன் ஒத்துழைத்து பழகுகிறார்கள். அதனாலேயே எனக்கு இந்த அணியில் நல்ல பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாகவே நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன் மேலும் அடுத்து வரும் போட்டிகளில் நாங்கள் மும்பை மைதானத்தில் விளையாட இருப்பதால் அந்த மைதானத்தை தற்போது கணித்து வருகிறோம்.

- Advertisement -

maxwell

இதற்கு முந்தைய போட்டிகளில் மும்பை மைதானத்தில் அனைத்து அணிகளும் ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளதால் நாங்களும் இந்த மைதானத்தில் ரன் குவிப்பை வழங்குவோம் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பெங்களூரு அணி தற்போது நான்காவது போட்டியில் ராஜஸ்தான் அணி உடன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.