சர்ச்சையான விக்கெட். கோபத்தால் ஹெல்மட், பேட்டை அடித்து நொறுக்கிய ஆஸி வீரர்

Mattehew Wade Angry
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 19-ஆம் தேதி நடைபெற்ற 67-ஆவது லீக் போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் சந்தித்தன. மும்பை வான்கடே மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் குஜராத்தை தோற்கடித்த பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 168/5 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் இளம் தொடக்க சுப்மன் கில் 1 (4) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த மேத்யூ வேட் 16 (13) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்.

அந்த சமயத்தில் அதிரடி காட்டிய மற்றொரு தொடக்க வீரர் ரித்திமான் சாஹா 31 (22) ரன்களில் அவுட்டானதால் 62/3 என தடுமாறிய தனது அணியை நங்கூரமாக நின்று கடைசி வரை அவுட்டாகாமல் தூக்கி நிறுத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி 3 சிக்சருடன் 62* (47) ரன்கள் எடுத்தார். அவருடன் டேவிட் மில்லர் முக்கியமான 34 (25) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் ரசித் கான் மிரட்டலாக வெறும் 6 பந்தில் 19* ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். பெங்களூரு சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

மும்பையின் கையில் பெங்களூரு:
அதை தொடர்ந்து 169 என்ற இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு பார்மின்றி தவிக்கும் விராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளசிஸ் ஆகியோர் முதல் ஓவரிலிருந்தே நிதானமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து ரன்களை சேர்த்தனர். தரமான பவுலர்களை கொண்ட குஜராத்தை 15 ஓவர்கள் வரை அட்டகாசமாக எதிர்கொண்ட இந்த ஜோடி 115 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சூப்பரான தொடக்கம் கொடுத்த நிலையில் டுப்லஸ்ஸிஸ் 44 (38) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில ஓவர்களில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 73 (54) ரன்கள் எடுத்த விராட் கோலி வெற்றியை உறுதி செய்து ஓரளவு நல்ல பார்முக்கு திரும்பி அவுட்டானர். இறுதியில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 40* (18) ரன்கள் எடுத்த கிளன் மேக்ஸ்வெல் அதிரடியான பினிஷிங் கொடுத்ததால் 18.4 ஓவர்களில் 170/2 ரன்கள் எடுத்த பெங்களூரு முக்கியமான வெற்றியைப் பெற்றது. குஜராத் சார்பில் பந்துவீச்சில் ரஷித் கான் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

இப்போட்டியில் தோல்வியடைந்தாலும் ஏற்கனவே முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட குஜராத 10 வெற்றிகளுடன் இந்த வருட ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறுதியில் முதலிடம் பிடித்த அணியாக அசத்தியுள்ளது. மறுபுறம் வாழ்வா – சாவா என்ற இப்போட்டியில் அற்புதமாக செயல்பட்ட பெங்களூரு 14 போட்டிகளில் 8 வெற்றியையும் தோல்வியையும் பதிவு செய்து 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் டெல்லியை முந்தி 4-வது இடத்திற்கு முன்னேறியது. இருப்பினும் வரும் மே 21இல் நடைபெறும் டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை வென்றால் மட்டுமே பெங்களூரு பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

சர்ச்சை அவுட்:
முன்னதாக இப்போட்டியில் 21/1 என்ற நிலைமையில் குஜராத் அணிக்காக களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 16 (13) சிறப்பான தொடக்கம் பெற்று அதிரடி காட்ட முயன்ற போது கிளன் மேக்ஸ்வெல் வீசிய 5-வது ஓவரின் 2-வது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அது அவுட்டில்லை என உணர்ந்த அவர் உடனடியாக ரிவ்யூ எடுத்தார். அதை 3-வது அம்பையர் முதலில் பேட்டில் பட்டதா என்று அல்ட்ராஎட்ஜ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சோதித்துப் பார்த்தபோது பந்து பேட்டை தாண்டி அவரது கிளவ்ஸ் பகுதியை நெருங்கும்போது நூலிழை போன்ற அசைவை ஸ்னிக்கோ மீட்டரில் காட்டியது. அதனால் நிச்சயம் அவுட்டில்லை என்று மேத்தியூ வேட் நினைத்துக் கொண்டிருந்தார்.

- Advertisement -

ஆனால் ஸ்னிக்கோ மீட்டரில் பெரிய ஸ்பைக் ஏற்படாத காரணத்தால் அடுத்த பகுதியான பால் ட்ராக்கிங்க்கு சென்ற அம்பயர் அதில் பிட்ச்சிங் இன் லைன் மற்றும் பந்து ஸ்டம்பில் பட்டதால் உடனடியாக அவுட் கொடுத்தார். அதனால் அதிர்ச்சியடைந்த மேத்யூ வேட் இது எப்படி அவுட்டாகும் என்பதுபோல் கடும் விரக்தியுடன் கோபத்துடனும் தலையை அசைத்துக்கொண்டே பெவிலியன் திரும்பினார். அவருக்கு விராட் கோலி கூட ஒருசில ஆறுதல் வார்த்தைகளை சொல்லி அனுப்பியது போல் தெரிந்தது.

ஆனால் பெவிலியன் அறைக்குள் நுழைந்ததும் கோபத்தால் எரிமலையாய் வெடித்த அவர் “அந்த அம்பயர் மட்டும் கையில் கிடைத்தால்” என்பது போல் தனது கையில் வைத்திருந்த ஹெமெட்டை தூக்கி எறிந்து அருகில் இருந்த நாற்காலியை பேட்டால் சரமாரியாக அடித்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நிறைய தவறான முடிவுகளை அம்பயர்கள் வழங்கியுள்ள நிலையில் இதுவும் தவறான முடிவுதான் என்று நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.

இதையும் படிங்க : முழு பார்முக்கு திரும்பினாரா சேஸ் மாஸ்டர் கிங் கோலி ! குஜராத்தை பந்தாடி 2 புதிய சாதனை

இந்த வருடம் 8 இன்னிங்ஸ்சில் 114 ரன்களை 14.25 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ள அவர் இப்போட்டியில் எப்படியாவது நிறைய ரன்கள் என்று முயற்சித்த போது அம்பயர் இப்படி செய்து விட்டாரே என்ற கோபத்திலேயே இப்படி செய்துள்ளார் என்று தெரிகிறது. எது எப்படி இருந்தாலும் மைதான பொருட்களை சேதப்படுத்தியதற்காக ஐபிஎல் நிர்வாகம் அவரை அதிகாரபூர்வமாக எச்சரிக்கை கொடுக்கும் வகையில் கண்டித்துள்ளது.

Advertisement