
நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியானது மார்ச் 4-ஆம் தேதி நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முக்கியமான அரையிறுதி போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.
மொத்தம் எட்டு நாடுகள் பங்கேற்ற இந்த ஐசிசி சாம்பியன்ஸ் தொடரானது கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி துவங்கிய வேளையில் தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் எதிர்வரும் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.
நாளை மார்ச் 4-ஆம் தேதி துபாயில் முதலாவது அரையிறுதி போட்டி நடைபெறவுள்ள வேளையில் இந்த அரையிறுதி போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து அதிரடி துவக்க வீரரான மேத்யூ ஷார்ட் விலகுவதாக இன்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
கடைசியாக நடைபெற்று முடிந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது காயத்தை சந்தித்த மேத்யூ ஷார்ட் இந்த அரையிறுதி போட்டியில் இருந்து வெளியேறுகிறார் என்றும் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் இளம் ஆல் ரவுண்டான கூப்பர் கோனாலி சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.
இப்படி மேத்யூ ஷார்ட் எஞ்சியுள்ள தொடரிலிருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக இளம் அதிரடி துவக்க வீரரான ஜேக் பிரேஸர் மெக்கர்க் துவக்க வீருக்கான இடத்தில் களமிறங்குவார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : இவர்தான் கேப்டன், இவர்தான் துணைக்கேப்டன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட – கே.கே.ஆர் நிர்வாகம்
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் அதிரடியான துவக்கத்தை ஏற்படுத்துவார் என்பதனால் அவரது சேர்க்கை ஆஸ்திரேலியா அணிக்கு பலத்தை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.