களத்தில் அதை மட்டும் செஞ்சா போதும்.. கேப்டன் கூல் தோனி கோபமாகிடுவாரு.. பின்னணியை பகிர்ந்த ஹெய்டன்

Matthew Hayden 2
- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இந்தியாவுக்காக 3 விதமான வெள்ளைப் பந்து ஐசிசி உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த மகத்தான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அத்துடன் வரலாற்றில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் அளவுக்கு விக்கெட் கீப்பிங்கில் அசத்திய அவர் மிடில் ஆர்டரில் நிறைய போட்டிகளில் நங்கூரமாக நின்று இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்த சிறந்த ஃபினிஷராக போற்றப்படுகிறார்.

அதே போல ஐபிஎல் தொடரில் 2008 முதல் தற்போது வரை சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார். பொதுவாக அழுத்தமான சமயங்களிலும் பதறாமல் தைரியமாக இருந்து வித்தியாச முடிவுகளை எடுத்து வெற்றிகளை பெறுவதில் தோனி மிகவும் கில்லாடியாக பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

அதை செஞ்சா கோபப்படுவாரு:
அதனால் கேப்டன் கூல் என்று அனைவராலும் பாராட்டப்படும் அவருடைய தலைமையில் விளையாடுவதற்கு இந்தியா மட்டுமன்றி நிறைய வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது வழக்கமாகும். இந்நிலையில் கூலாக இருக்கக்கூடிய தோனியை களத்தில் சுமாராக ஃபீல்டிங் செய்தால் மிகவும் எளிதாக கடுப்பேற்றி கோபமடைய வைக்கலாம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் மேத்தியூ ஹெய்டன் கூறியுள்ளார்.

2008 – 2010 வரையிலான காலகட்டங்களில் தோனி தலைமையிலான சென்னை அணியில் விளையாடிய அவர் இது பற்றி சமீபத்தில் போட்டியில் ரசிகர்கள் அறியாத பின்னணியை பகிர்ந்து பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனி எளிதில் மடக்க முடியாதவர் என்று நீங்கள் சொல்ல வேண்டும். ஆனால் உண்மையிலேயே அவரசி நீங்கள் கடுப்பேற்ற விரும்பினால் களத்தில் மந்தமான ஃபீல்டிங் செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள்”

- Advertisement -

“மேலும் நல்ல ஃபீல்டிங்கில் முக்கிய பங்காற்றாதீர்கள். அப்படி நீங்கள் செய்தால் “ஓ அது நன்றாக இருக்காது” என்று நீங்கள் அவரைப் பார்த்து சொல்லும் சில நேரங்களில் ஒன்றாக இருக்கும்” என்று கூறினார். அவர் கூறுவது போல பேட்டிங், பவுலிங் என்பதை தாண்டி ஃபீல்டிங் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு எப்போதுமே தோனி முக்கியத்துவம் கொடுப்பவராகவே இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: 2024 ஐ.பி.எல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார்.. ஆனா எப்படி தெரியுமா? – வெளியான தகவல்

குறிப்பாக சேவாக் போன்ற மூத்த வீரர்கள் மிகவும் மெதுவாக ஓடி சுமாராக ஃபீல்டிங் செய்வதாக வெளிப்படையாக தெரிவித்த அவர் 2011 உலகக் கோப்பைக்கு பின் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா போன்ற இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்தார். அந்த வகையில் இன்று இந்திய அணியில் ஃபீல்டிங் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு தோனியும் ஒரு காரணமாக இருந்தார் என்றால் மிகையாகாது.

Advertisement