ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 4ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெற்ற 54வது போட்டியில் லக்னோவை 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 237 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 91, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 45, சசாங் சிங் 33*, ஜோஸ் இங்லிஷ் 30 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய லக்னோ தடுமாற்றமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 199/7 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஆயுஷ் படோனி 74, அப்துல் சமத் 45 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதையும் சேர்த்து 7 வெற்றிகளை பெற்ற பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.
தோனி போல ப்ரம்சிம்ரன்:
இந்த வெற்றிக்கு துவக்க வீரராக களமிறங்கி 6 பவுண்டரி 7 சிக்ஸருடன் 91 (48) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ஆட்டநாயகன் விருதை வென்றார். 24 வயதாகும் அவர் சமீப காலங்களாகவே பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக கடந்த வருடம் 14 போட்டிகளில் அவர் 334 ரன்களை அடித்து பஞ்சாப் வெற்றிக்காக போராடினார்.
இந்த வருடம் 11 போட்டிகளிலேயே 437 ரன்கள் அடித்துள்ள அவர் முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் 2010ஆம் ஆண்டு இதே தரம்சாலா மைதானத்தில் இளம் தோனி சிஎஸ்கே அணிக்காக கடைசி ஓவரில் அடுத்தடுத்த சிக்ஸர்கள் பறக்க விட்டு பஞ்சாப்பை தோற்கடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றதாக மேத்தியூ ஹைடன் நினைவுக் கூர்ந்துள்ளார். அதே போல பிரப்சிம்ரன் பயமின்றி பேட்டிங் செய்வதாக அவர் பாராட்டியுள்ளார்.
ஹைடன் பாராட்டு:
இது பற்றி ஹைடன் பேசியது பின்வருமாறு. “இவரிடம் சிறந்த பவர் இருக்கிறது. 2010இல் அங்கே இளம் எம்எஸ் தோனி நாளின் இறுதி ஓவரின் பந்துகளை சிக்ஸர்களாக பறக்க விட்டார். பிரப்சிம்ரன் அதே போன்ற பண்புகளைக் கொண்டுள்ளார். அவரிடம் அற்புதமான பேட்டை சுழற்றும் வேகம், திடமான பேஸ் (அடிப்படை) இருக்கிறது. அவர் அந்தளவுக்கு உயரமானவர் கிடையாது”
இதையும் படிங்க: இப்படி விளையாடுனா கஷ்டப்பட்டு தான் ஆகனும்.. எல்லா மேட்ச்லயும் சக்ஸஸ் ஆகும்னு நெனைக்குறது தப்பு – ரிஷப் பண்ட் பேட்டி
“அதனால் அவர் பயமின்றி இடைவெளிகளைப் பார்த்து பந்தை அடிக்கிறார். லக்னோ பவுலர்கள் வீசிய பந்துகளை அவர் எடுத்து அடுத்த விதத்தைப் பாருங்கள். அது முழுமையாக அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது. கச்சிதமாக விளையாடிய விதைத்தால் அவர் எதிரணி பவுலர்களைத் தவறு செய்ய வைத்தார்” என்று கூறினார்.



