358 ரன்ஸ்.. 16 பந்தில் 50.. ஏபிடி’யின் உலக சாதனையை சமன் செய்த போர்ட்.. அயர்லாந்தை நொறுக்கிய வெ.இ

WI vs IRE
- Advertisement -

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. மே 21ஆம் தேதி துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அயர்லாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி மே 23ஆம் தேதி டப்லின் நகரில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்கள் பிரண்டன் கிங் 8, எவின் லெவிஸ் 20 ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த கேசி கார்ட்டி அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சாய் ஹோப் 49 ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அதிரடி:

அடுத்ததாக வந்த அமீர் ஜங்கோ 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய கேசி கார்ட்டி அபாரமான சதத்தை அடித்து 102 (109) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக வந்த ஜஸ்டின் க்ரீவ்ஸ் அதிரடியாக விளையாடினார்.

எதிர்புறம் வந்த ரோஸ்டன் சேஸ் 24 (25) ரன்னில் விக்கெட்டை இழந்தார். ஆனால் அவருக்கு அடுத்ததாக வந்த மேத்தியூ போர்ட் சரவெடியாக விளையாடினார். குறிப்பாக ஜோஸ்வா லிட்டில் வீசிய 45வது ஓவரில் 6, 0, 6 நோபால், 6, 6 என அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்ட அவர் வெறும் 16 பந்தில் 50 ரன்கள் அடித்தார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமான அரை சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

- Advertisement -

உலக சாதனை சமன்:

இதற்கு முன் 2015ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் 16 பந்துகளில் 50 ரன்கள் அடித்தது இன்னும் உலக சாதனையாக இருந்து வருகிறது. அவருடைய சாதனையை இன்று போர்ட் சமன் செய்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 2 பவுண்டரி 8 சிக்சர்களை பறக்க விட்ட 58 (19) ரன்கள் விளாசி அவுட்டானார்.

இதையும் படிங்க: ஆர்.சி.பி அணிக்கு விழப்போகும் பெரிய அடி.. பிளே ஆப் சுற்றுக்கு முன்னதாக வெளியேறும் பில் சால்ட் – காரணம் என்ன?

இறுதியில் ஜஸ்டின் க்ரிவ்ஸ் அதிரடியாக 44* (36), குடகேஷ் மோட்டி 18 (8) ரன்கள் குவித்து அபார ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 50 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 352/8 ரன்கள் குவித்து மிரட்டியது. அயர்லாந்து அணிக்கு அதிகபட்சமாக பேரி மெக்கார்தி 2, லியம் மெக்கார்தி 3, ஜோஸ்வா லிட்டில் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement