விராட் கோலி மட்டுமல்ல இவருக்கும் பார்ம் அவுட் தான். அவரை பத்தி யோசிச்சீங்களா? – மேத்யூ ஹைடன் ஓபன்டாக்

Hayden
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோலி தொடர்ச்சியாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவது அனைவரது மத்தியிலும் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி பல சாதனைகளைப் படைத்த விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் இழந்த தனது பார்மை மீட்டு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தொடர்ச்சியாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார்.

Virat Kohli Golden Duck

இதன் காரணமாக அவருக்கு பலரும் தங்களது அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். ஆனால் அதேவேளையில் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் பார்மும் மிகவும் மோசமாக உள்ளது அவரைப் பற்றி யாரும் பேசாதது ஏன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கேள்வி எழுப்பி உள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தொடர்ச்சியாக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை எடுக்க திணறி வரும் அவர்கள் தொடர்ச்சியாக எளிதான முறையில் ஆட்டம் இழந்து வருகின்றனர். ஆனால் விராட் கோலியை மட்டுமே அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர்.

Rohit Sharma vs KKR

ரோகித் சர்மா குறித்து யாரும் வாய் திறப்பதே கிடையாது. ரவிசாஸ்திரி கோலிக்கு ஓய்வு வேண்டும் என்று கூறுகிறார். அது ரோகித் சர்மாவிற்கு பொருந்துமா என்று தெரியவில்லை. ஏனெனில் கடந்த பல வருடங்களாகவே கோலி மற்றும் ரோஹித் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதோடு மிகவும் பிட்டாக விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

மிகப்பெரிய வீரர்களான அவர்கள் இருவரும் நிச்சயம் தங்களது அனுபவத்தின் மூலம் மீண்டு வருவார்கள். கடந்த ஆண்டுகளில் அவர்கள் அனைத்து விடயங்களையும் சரியாக செய்திருக்கிறார்கள். எனவே அவர்களை விமர்சிப்பது தவறான ஒன்று என்றாலும் விரைவில் அவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்ப வேண்டும் என ஹைடன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கிரிக்கெட் செய்திகள்இந்திய கிரிக்கெட் டி20 உலகக்கோப்பையை ஜெயிக்கணுனா இந்திய அணியில் அவரை சேர்த்தே ஆகனும் – ஷேன் பொல்லாக் ஓபன்டாக்

இன்னும் சில மாதங்களில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ள வேளையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement