டி20 உலகக்கோப்பையை ஜெயிக்கணுனா இந்திய அணியில் அவரை சேர்த்தே ஆகனும் – ஷேன் பொல்லாக் ஓபன்டாக்

Pollock
- Advertisement -

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் டி20 உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற இந்திய அணி உற்று நோக்கி வருகிறது. கடந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி விராட் கோலியின் தலைமையில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து உள்ளதால் தற்போது ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியானது கட்டமைக்கப்பட்டு வருகிறது.

Indian Team

- Advertisement -

அதன்படி இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாடு எப்படி அமைகிறதோ அதை வைத்துதான் இந்திய அணியின் தேர்வும் இருக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பல வீரர்களின் செயல்பாடு மோசமாக உள்ளதால் உலக கோப்பை தொடருக்கான அணி தேர்வு என்பது எவ்வாறு அமையும் என்பதில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தோனியின் தலைமையில் 2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியானது அதன்பின் இதுவரை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை என்பதனால் இந்த ஆண்டு நிச்சயம் ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை கைப்பற்றிய ஆகவேண்டும் என்ற உத்வேககத்தில் உள்ளது.

Chahal

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் எந்தெந்த வீரர்கள் இடம் பெற வேண்டும் என்பது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷேன் பொல்லாக் இந்திய அணி குறித்து சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் நிச்சயம் இந்திய அணியில் இடம் பெற வேண்டும். ஏனெனில் அவர் இழந்த பார்மை மீட்டெடுத்தது மட்டுமின்றி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். அவர் ஒரு திறமைவாய்ந்த வீரர் என்பதில் சிறிதளவும் சந்தேகம் கிடையாது. தற்போது அவருடைய ஆட்டம் அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் மிகச்சிறப்பாக உள்ளது.

இதையும் படிங்க : தமிழக வீரரான அவரு இந்திய அணிக்கு கிடைத்த சொத்து. அவரை டீம்ல ஆட வையுங்க – சோயிப் அக்தர் கருத்து

அவரது பந்துவீச்சு கடந்த சில மாதங்களாகவே மிகப் பிரமாதமாக உள்ளது. ஆஸ்திரேலியா போன்ற பெரிய மைதானங்களில் அவரைப் போன்ற ஒரு சுழற்பந்து வீச்சாளர் நிச்சயம் இந்திய அணிக்கு பெரிதளவு உதவுவார் என்று நம்புகிறேன். அவரை நிச்சயம் அணியில் சேர்க்க வேண்டும் என்று பொல்லாக் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement