தமிழக வீரரான அவரு இந்திய அணிக்கு கிடைத்த சொத்து. அவரை டீம்ல ஆட வையுங்க – சோயிப் அக்தர் கருத்து

Akhtar
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது தற்போது 15-வது சீசனாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடுவதன் மூலம் பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேசிய அணிக்கும் தேர்வாகி உள்ளனர். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் இந்த நடப்பு ஐபிஎல் தொடரிலும் பல இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சரியான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

RCB vs SRH

- Advertisement -

மொத்தம் 70 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட போட்டிகள் முடிவடைந்து விட்டதால் தற்போது இந்த ஐபிஎல் தொடரானது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. எஞ்சியுள்ள சில போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போகும் அணிகள் எது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்கள் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வேளையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Nattu

நடப்பு ஐபிஎல் தொடரில் தமிழக வீரரான நடராஜனின் செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளது. அவரது பந்துவீச்சில் ஒரு தனித்துவம் உள்ளது. நிச்சயம் இந்திய அணிக்கு நடராஜன் மிகப் பெரிய பலத்தை அளிப்பார். நிச்சயம் அவரின் திறனை அறிந்து சரியாக அணியில் பயன்படுத்தினால் அது இந்திய அணியின் எதிர்காலத்திற்கு நல்லது.

- Advertisement -

அவருக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்து விளையாடும் நாளை நான் எதிர்பார்த்து காத்துள்ளேன் என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் பெரும்பாலான போட்டிகளை தவறவிட்ட நடராஜன் தற்போது மீண்டும் சன் ரைசர்ஸ் அணிக்காக தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : இவரை ஏன் அணியில் சேக்காமல் இருந்தீங்க. சி.எஸ்.கே அணியை தேர்வினை குற்றம் சாட்டிய – முகமது கைப்

இதுவரை நடப்பு ஐ.பி.எல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சில போட்டிகளாகவே காயம் காரணமாக அவர் அணியில் விளையாடாமல் உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Advertisement