இனி இந்த டீமை அவ்ளோ ஈஸியா யாராலும் தோக்கடிக்க முடியாது – எச்சரித்த மேத்யூ ஹைடன்

Hayden
Advertisement

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் சூப்பர் 12 சுற்றில் விளையாடிய 12 அணிகளில் இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த நான்கு அணிகள் தற்போது அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளன. அந்த வகையில் குரூப் ஒன்றில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் இரண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்காக தேர்வாகியுள்ளன.

Semi Finals

அந்தவகையில் வரும் நவம்பர் 9-ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கும் முதலாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. அதன் பின்னர் நவம்பர் 10-ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மோத இருக்கின்றன. இந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் விளையாடும்.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி சூப்பர் 12 சுற்று ஆட்டங்களில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே தோல்வி அடைந்ததால் இந்த தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெறாது என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா அணி தோற்கவே பாகிஸ்தானுக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு கிடைத்தது.

Pakistan

அந்த வகையில் கடைசி போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்திய அவர்கள் தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் ஆலோசாக இருக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான மேத்யூ ஹைடன் : பாகிஸ்தான் அணியை இனி எளிதில் வீழ்த்துவது சிரமம் என்று மற்ற அணிகளை எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான அணி தோற்றபின் இந்த தொடரில் இருந்து வெளியேறும் என்று அனைவரும் பேசி வந்தனர்.

- Advertisement -

ஆனால் தற்போதுள்ள சூழல் அனைத்தும் மாறி பாகிஸ்தான அணி மீண்டும் ஃபார்ம்-க்கு திரும்பி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இருக்கும் ஃபார்மில் மற்ற அணிகள் அவர்களை வீழ்த்துவது கடினம். உலகின் எந்த ஒரு அணியையும் தற்போதைய நிலையில் பாகிஸ்தான் அணியால் வீழ்த்த முடியும். இனிவரும் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை யாரும் தோற்கடிக்கப் போவதில்லை.

இதையும் படிங்க : அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்ட இலங்கை வீரர் – அதிகாரபூர்வ அறிவப்பு

தற்போது உள்ள நிலையில் பாகிஸ்தான் மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. அரையிறுதியில் பாகிஸ்தான் அணி இருப்பதை யாரும் விரும்பி இருக்க மாட்டார்கள். ஆனால் அதிர்ஷ்டம் பாகிஸ்தான அணியின் பக்கம் இருக்கவே நாங்கள் தற்போது சாதகமான நிலையை எட்டியுள்ளோம். நிச்சயம் பாகிஸ்தான அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று மற்ற அணிகளை மேத்யூ ஹைடன் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement