ஒன்னுமே பண்ணலனாலும் தோனி மதிப்புமிக்க வீரர் தான். அதுக்கு அர்த்தம் இருக்கு – மேத்யூ ஹைடன் புகழாரம்

Hayden
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத சிஎஸ்கே அணி இம்முறை மீண்டும் பலமாக திரும்பியுள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 10 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சிஎஸ்கே அணி 16 புள்ளிகளுடன் தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மட்டுமின்றி கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை அந்த அணியின் வீரர்கள் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ruturaj

- Advertisement -

குறிப்பாக துவக்க வீரர்களான கெய்க்வாட் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் ஆகியோர் தங்களது அருமையான துவக்கத்தை ஒவ்வொரு போட்டியிலும் அளிக்கின்றனர். அதேபோன்று எப்போதாவது ரன் குவிப்பில் தொய்வு ஏற்படும்போது மிடில் ஆர்டரில் மொயின் அலி, ராயுடு ஆகியோரும் பின்வரிசையில் ஜடேஜா மற்றும் பிராவோவும் கை கொடுக்கின்றனர். அதேபோன்று பந்துவீச்சில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஹேசல்வுட் என அனைவரும் அசத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக தற்போது சென்னை அணி வீழ்த்த முடியாத அணியாக இந்தத் தொடரில் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருக்கும் ஒரே ஒரு வருத்தம் யாதெனில் கேப்டன் தோனி ரன் குவிக்க முடியவில்லை என்பது மட்டும்தான். 10 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 100 ரன்களைக் கூட அடிக்கவில்லை. தோனியின் மோசமான பேட்டிங் மட்டும் தான் தற்போது சி.எஸ்.கே ரசிகர்களுக்கு ஒரு கவலையாக உள்ளது.

dhoni 3

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான மேத்யூ ஹைடன் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னைப்பொருத்தவரை தோனியின் பேட்டிங் பார்ம் முக்கியமில்லை. எப்போது வேண்டுமோ அப்போது தோனியால் ரன்களை குவிக்க முடியும். இப்போது உள்ள அணியில் அனைத்து வீரர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

Dhoni-1

தோனி பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை என்பது உண்மைதான். இந்த தொடர் முழுவதுமே அவர் பேட்டிங்கில் ஒன்றுமே செய்யவில்லை. இருப்பினும் அவர் இந்த தொடரின் மதிப்பு மிக்க வீரர் தான். ஏனெனில் தோனியின் கேப்டன்சி வேறு யாரிடமும் இல்லை. அவர் அணியை திறம்பட வழிநடத்துகிறார். எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர் அணியை சரியாகவே கொண்டு செல்கிறார்.

இதையும் படிங்க : அணியில் ஒரு அதிரடி மாற்றத்தை செய்த தல தோனி. முதலில் பவுலிங் – தோனியின் திட்டம் இதுதான்

கேப்டன்சியில் ஏகப்பட்ட சவால்களை அவர் ஒரு போட்டியிலும் எதிர்கொள்கிறார். அதனை லாவகமாக எதிர்கொண்டு வெற்றியுடன் அணியை வழிநடத்துகிறார். எனவே அவரை நான் ஒரு மதிப்பு மிக்க வீரராக தன் பார்க்கிறேன் என ஹைடன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement