- Advertisement -
ஐ.பி.எல்

எம்.எஸ் தோனி எனக்கு ஒரு அப்பா மாதிரி மட்டுமில்ல.. கடவுள் மாதிரி – மதீஷா பதிரானா நெகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களை ஜாம்பவான்களாக மாற்றுவதில் முன்னோடி என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் ஏற்கனவே விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களை அவர்கள் தடுமாறிய போது துணை நின்று ஆதரித்து ஜாம்பவானாக மாற்றிய பெருமை தோனிக்கு உண்டு. அதேபோன்று இந்திய அணியில் பல்வேறு திறமையான வீரர்களுக்கு ஆதரவளித்து அவர்களை மிகப்பெரிய திறமைசாலியாக மாற்றிய புகழும் தோனிக்கு உண்டு.

தோனி எனக்கு கடவுள் மாதிரி : மதீஷா பதிரனா

இப்படி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமில்லாமல் ஐபிஎல் போட்டிகளிலும் அவர் பார்ம் இழந்த வீரர்களை அணிக்குள் அழைத்து மீண்டும் அவர்களை பெரிய வீரராக மாற்றிய நிகழ்வுகளை எல்லாம் நாம் கண்டுள்ளோம். அந்த வகையில் தான் இலங்கை அணியை சேர்ந்த மதீஷா பதிரானாவை கண்டறிந்து ஐ.பி.எல் தொடருக்கு அழைத்து வந்திருந்தார்.

- Advertisement -

அந்நாட்டு கிரிக்கெட் வாரியமே அறியும் முன்னதாக ஐபிஎல்-க்கு பதிரானாவை கொண்டு வந்து இன்று தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக மாற்றியுள்ளார். அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வீடியோ ஒன்றில் பதிரனாவை கண்ட தோனி உடனடியாக அவரை சிஎஸ்கே அணியின் பயிற்சிக்கு அழைத்து அதன் பின்னர் 20 லட்சம் ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுத்து அவரை சிஎஸ்கே அணியில் விளையாடவும் வைத்தார்.

அதனை தொடர்ந்து தற்போது தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் பதிரானா இதுவரை 22 போட்டிகளில் விளையாடி 39 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். அதிவேகப்பந்துவீச்சு மட்டுமின்றி ரன்களை சிக்கனமாக விட்டுக் கொடுத்து விக்கெட் எடுக்கும் வீரராக திகழ்ந்து வரும் பதிரானா நடப்பு 2025 ஐபிஎல் தொடரிலும் தனது அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் எம்.எஸ் தோனி தன்னுடைய தந்தையை போன்றவர் என்பது மட்டுமின்றி கடவுளைப் போன்றவர் என்று நெகிழ்ச்சியான சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : எம்.எஸ் தோனியை பற்றி பேச எனக்கு வார்த்தைகள் போதாது. உண்மையிலேயே அவர் ஒரு கடவுள் மாதிரி. என்னுடைய தந்தை என்னை எவ்வாறு பார்த்துக் கொள்வாரோ அதேபோன்று எம்.எஸ். தோனி எனக்கு மிகுந்த ஆதரவை அளித்து கவனித்துக் கொண்டார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றில் முதல் நபராக சுனில் நரேன் நிகழ்த்திய வரலாற்று சாதனை – விவரம் இதோ

ஐபிஎல் தொடரில் நான் அறிமுகமானதிலிருந்து தற்போது வரை அவர் எனக்கு தரும் அன்பும், ஆதரவும் அளப்பரியது. அந்த அளவிற்கு என் திறமையின் மீதும் என் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் அவர் என்னை தொடர்ச்சியாக ஆதரித்து வருகிறார். அவரிடம் இருந்து கிடைக்கும் அறிவுரைகள் மற்றும் பாடங்களே இன்று நான் சிறப்பாக விளையாட உதவுகிறது என மதீஷா பதிரானா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -