தோனியின் செல்லப்பிள்ளை உலககோப்பை தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேற்றம் – என்ன ஆனது அவருக்கு?

Pathirana
- Advertisement -

தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. ஏற்கனவே இலங்கையில் நடைபெற்ற முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இடம் தோல்வியை சந்தித்து சாம்பியன் பட்டத்தை இழந்த அந்த அணியானது இந்த உலகக் கோப்பை தொடரிலாவது சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் மூன்று போட்டிகளில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே தோல்வியை சந்தித்து மோசமான துவக்கத்தை பெற்றுள்ளது.

கடைசியாக நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற இலங்கை அணியானது இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் இதுவரை நான்கு போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ஏற்கனவே இந்த அணியின் கேப்டன் தசுன் ஷனகா தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரின் ஆரம்பத்திலேயே அந்த அணியில் இருந்து வெளியேறியது பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

அதோடு அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹஸரங்கா இந்த உலககோப்பை தொடரில் விளையாடாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறிய வேளையில் தற்போது மேலும் ஒரு வீரர் இலங்கை அணியில் இருந்து அதிகாரவபூர்வமாக வெளியேறுகிறார் என்ற தகவல் வெளியாகி இலங்கை அணியை பரிதாப நிலைக்கு தள்ளியுள்ளது.

அந்த வகையில் இலங்கை அணியின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானா இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் நான்கு போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற நிலையில் தற்போது இந்த தொடரில் இருந்து வெளியேறுகிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த உலக கோப்பை தொடரின் ஆரம்பத்தில் சில போட்டிகளில் பங்கேற்ற அவர் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் காரணமாக அணியிலிருந்து கழட்டி விடப்பட்டுள்ள வேளையில் தற்போது ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் இருந்து அவர் வெளியேறியுள்ளார். அந்த வகையில் பதிரானாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை தவிர்த்து அவருக்கு எம்மாதிரியான காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க இருக்கும் ஹார்டிக் பாண்டியா. அவர் வந்தா டீம்ல இருந்து – வெளியேறப்போவது யார்?

இருப்பினும் அவர் தற்போது இலங்கை அணியில் இருந்து விலகி நாடு திருப்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் மூன்று தோல்விகளை சந்தித்துள்ள இலங்கை அணியானது அடுத்ததாக இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து போன்ற பலமான அணிகளுக்கு எதிராக விளையாட இருப்பதினால் நிச்சயம் அவர்கள் அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டு லீக் சுற்றின் முடிவிலேயே இந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறுவார்கள் என்பது உறுதி.

Advertisement