சி.எஸ்.கே டீம்ல விளையாடுன ராசி. மதீஷா பதிரானவுக்கு கை மேல் அடித்த ஜாக்பாட் – இலங்கை வாரியம் வெளியிட்ட அறிவிப்பு

Matheesha-Pathirana
- Advertisement -

20 வயது மட்டுமே நிரம்பிய இலங்கை வீரர் மதீஷா பதிரானா இந்தியாவில் தற்போது நடைபெற்று முடிந்த 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சி.எஸ்.கே அணியில் இடம்பிடித்திருந்தார். இந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்ல இவரது சிறப்பான பந்துவீச்சும் ஒரு காரணம் என்றால் அதுமிகையல்ல. ஏனெனில் இந்த தொடரில் மட்டும் அவர் 19 விக்கெட்டுகளை கைப்பற்றி பந்துவீச்சில் மேட்ச் வின்னராக செயல்பட்டார்.

Pathirana

- Advertisement -

கடந்த 2022-ஆம் ஆண்டே தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியில் அறிமுகமான பதிரானா தோனியின் கவனத்தை அதிகளவில் ஈர்த்திருந்தார். இந்நிலையில் இந்தாண்டு அவரது திறனை சரியாக பயன்படுத்திய தோனி அவரிடம் இருந்த சிறப்பான பந்துவீச்சை வெளிக்கொண்டு வந்தார். அதிலும் பதிரானா வீசும் யார்க்கர்கள் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை கூட தடுமாற வைக்கிறது.

இந்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக டெத் ஓவர்களில் மட்டுமே பந்துவீசி வந்த அவர் ஓவருக்கு 8 ரன்களுக்குள் மட்டுமே வழங்கியது மட்டுமின்றி இறுதிநேரத்தில் விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். எப்பொழுமே எந்தவொரு வீரரையும் பெரிதாக பாராட்டாமல் பேசும் தோனியே மதீஷா பதிரானாவை இந்த தொடரில் அதிகளவில் பாராட்டியிருந்தார்.

Pathirana

அதிலும் குறிப்பாக பதிரானாவை டெஸ்ட் போட்டிகளில் விளையாடவைக்க வேண்டாம் என்றும் ஐ.சி.சி தொடர்களில் மட்டும் பயன்படுத்தினால் இலங்கை அணியின் ஸ்டாராக மாறுவார் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தோனியின் வார்த்தை பலிக்கும் படி இந்த ஐ.பி.எல் தொடர் முடிவடைந்த கையோடு அவருக்கு இலங்கை கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக கூறியுள்ளது.

- Advertisement -

அந்தவகையில் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் பதிரானா கடந்த ஆண்டு இலங்கை அணிக்காக அறிமுகமாகியிருந்தாலும் 1 ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியிருந்தார். ஆனால் இப்போது பதிரானா இருக்கும் பார்மை பார்த்த இலங்கை கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பை வழங்கியுளது. இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் 50 ஓவர் உலககோப்பை நடைபெறவுள்ள வேளையில் அவருக்கு இலங்கை அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IPL 2023 : இந்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் யார் தெரியுமா? – அவர் படைத்த சாதனை என்ன தெரியுமா?

அந்தவகையில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி அடுத்ததாக ஜூன் 2, 4, 7 ஆகிய தேதிகளில் தங்களது சொந்த மண்ணில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான ஒருநாள் அணியில் 16 பேர் கொண்ட அதிகாரபூர்வ பட்டியலில் பதிரானாவிற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement