IPL 2023 : இந்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் யார் தெரியுமா? – அவர் படைத்த சாதனை என்ன தெரியுமா?

Ruturaj-Gaikwad
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வந்த நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது. அகமதாபாத் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை போட்டியின் கடைசி பந்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தோனி தலைமையிலான சி.எஸ்.கே 5 ஆவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

CSK 2023

- Advertisement -

இந்த தொடர் முழுவதுமே சென்னை அணியின் பந்துவீச்சு சற்று சறுக்கலை சந்திருந்தாலும் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இறுதியில் கோப்பையை வெல்லவும் முடிந்தது. அதேபோன்று நீண்ட பேட்டிங் ஆர்டரை கொண்ட சென்னை அணியானது மீண்டும் தாங்கள் எவ்வளவு பலமான அணி என்பதை வெளிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் சென்னை அணிக்காக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் யார்? அவர் என்ன சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறித்து இங்கு காணலாம். அதன்படி இந்த தொடர் முழுவதுமே சி.எஸ்.கே அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோர் மிகச்சிறப்பான துவக்கத்தை அளித்திருந்தனர்.

Devon Conway

அந்த வகையில் இந்த இருவரில் ஒருவர் தான் அதிக ரன்கள் அடித்திருப்பார்கள் என்று நீங்கள் யூகிப்பது உண்மைதான். இந்த ஆண்டு சென்னை அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர் டேவான் கான்வே தான். கடந்த ஏலத்தில் அவரை சி.எஸ்.கே அணி தேர்வு செய்தபோது இதெல்லாம் என்ன தேர்வு என்று பலரும் யோசித்திருப்பார்கள்.

- Advertisement -

ஆனால் தோனியின் தலைமையில் யார் விளையாடினாலும் அவர்கள் தங்களது திறனின் உச்சத்தை தொடுவார்கள். அந்தவகையில் இந்த சீசனில் மட்டும் சி.எஸ்.கே அணிக்காக 16 போட்டிகளில் விளையாடிய கான்வே 672 ரன்களை குவித்து அசத்தினார். இதன்மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் அடித்த 635 ரன்களை கடந்துள்ளார். அதோடு இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : CSK vs GT : ஃபைனலில் குஜராத்தின் இரட்டை வரலாற்று சாதனையை – மழையின் உதவியுடன் சிஎஸ்கே தூளாக்கியது எப்படி?

அதுமட்டுமின்றி சி.எஸ்.கே அணிக்காக ஒரு சீசனில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரராக இருக்கும் மைக் ஹஸ்ஸி-க்கு பிறகு டேவான் கான்வே (672 ரன்களுடன்) இரண்டாம் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் கடந்த 2013 ஆம் ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக மைக்கல் ஹஸ்ஸி 733 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement