பவர் பிளேவில் தோனி பாய் சொன்ன அட்வைஸ் ஹெல்ப் பண்ணுச்சு.. ஆட்டநாயகன் பதிரனா பேட்டி

Pathirana CSK
- Advertisement -

அனல் பறக்க நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற 29வது லீக் போட்டியில் பரம எதிரி மும்பையை நடப்பு சாம்பியன் சென்னை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் 69, சிவம் துபே 66*, எம்எஸ் தோனி 20* ரன்கள் எடுத்த உதவியுடன் 207 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா கடைசி வரை அவுட்டாகாமல் 11 பவுண்டரி 5 சிக்ஸருடன் 105* (63) ரன்கள் குவித்து போராடினார். ஆனாலும் எதிர்ப்புறம் இசான் கிஷான் 23, சூரியகுமார் யாதவ் 0, திலக் வர்மா 31, கேப்டன் பாண்டியா 2, டிம் டேவிட் 13 என இதர வீரர்கள் பெரிய ரன்கள் அடிக்க தவறினர். அதனால் 20 ஓவரில் மும்பை 186/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

ஆட்டநாயகன் பதிரனா:
அந்தளவுக்கு அபாரமாக பந்து வீசி இந்த சீசனில் 4வது வெற்றியை பதிவு செய்த சென்னைக்கு அதிகபட்சமாக மதிசா பதிரனா 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். குறிப்பாக 4 ஓவரில் 28 ரன்கள் மட்டும் கொடுத்து சூரியகுமார் யாதவ் விக்கெட்டை எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்நிலையில் பவர்பிளே ஓவரில் பதற்றமாக இருந்த போது எதைப் பற்றியும் கவலைப்படாமல் பந்தை வீசுமாறு தோனி சொன்னது தமக்கு உதவியதாக பதிரனா கூறியுள்ளார். அதைப் பயன்படுத்தி வெற்றியைப் பற்றி கவலைப்படாமல் திட்டத்தை சரியாக செயல்படுத்தியதாக கூறும் அவர் போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “நாங்கள் பவர் பிளேவில் பந்து வீசும் போது நான் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். ஆனால் அப்போது என்னிடம் வந்த தோனி பாய் அமைதியாக விளையாடுமாறு சொன்னார். அது இன்று எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது”

- Advertisement -

“அதனால் நான் முடிவைப் பற்றி கவலைப்படாமல் என்னுடைய திட்டத்தில் கவனம் செலுத்தினேன். அதை சரியாக செய்தால் எனக்கு பரிசு கிடைக்கும். சில நேரங்களில் எதிரணியில் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு தகுந்தார் போல் என்னுடைய திட்டத்தை மாற்ற வேண்டும். கடந்த சில வாரங்களாக லேசான காயத்தால் நான் அவதிப்பட்டு வந்தேன்”

இதையும் படிங்க: 105 ரன்ஸ் அடித்தும் ஹிட்மேனுக்கு நேர்ந்த சோகம்.. 4 விக்கெட்ஸ்.. மும்பையை வீழ்த்திய குட்டி மலிங்கா, தல தோனி

“ஆனால் பயிற்சியாளர் குழுவினர் எனக்கு ஆதரவு கொடுத்தனர். அவர்கள் தான் மீண்டும் நான் ஃபார்முக்கு திரும்புவதற்கு முக்கிய காரணம்” என்று கூறினார். அந்த வகையில் குட்டி மலிங்கா என்று சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடும் பதிரனா இப்போட்டியில் உண்மையான மலிங்கா பயிற்சி கொடுக்கும் மும்பை அணியை தோற்கடித்து ஆட்டநாயகன் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement