105 ரன்ஸ் அடித்தும் ஹிட்மேனுக்கு நேர்ந்த சோகம்.. 4 விக்கெட்ஸ்.. மும்பையை வீழ்த்திய குட்டி மலிங்கா, தல தோனி

MI vs CSK 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 29வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளாக சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு வித்தியாசமாக ஓப்பனிங்கில் வந்த அஜிங்கிய ரஹானே தடுமாறி 5 (8) ரன்னில் அவுட்டானார். இருப்பினும் அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் சற்று தடுமாறிய மற்றொரு துவக்க வீரர் ரச்சின் ரவீந்தரா இரண்டாவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 21 (16) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சென்னை வெற்றி:
அப்போது வந்த சிவம் துபே தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் ருதுராஜ் 3வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 69 (40) ரன்கள் குவித்து அவுட்டானார். அப்போது வந்த டேரில் மிட்சேல் தடுமாறி 17 (14) ரன்களில் அவுட்டானதை தொடர்ந்து களமிறங்கிய ஜாம்பவான் எம்.எஸ். தோனி கடைசி ஓவரில் பாண்டியாவுக்கு எதிராக ஹாட்ரிக் சிக்ஸருடன் 20* (9) ரன்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார்.

மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் மிரட்டிய துபே 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் 66* (38) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் சென்னை 206/4 ரன்கள் எடுத்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பாண்டியா 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 207 ரன்களை துரத்திய மும்பைக்கு ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து அடித்து நொறுக்கிய இசான் கிசான் 70 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அச்சுறுத்தலை கொடுத்தார்.

- Advertisement -

அப்போது அவரை 23 (15) ரன்களில் காலி செய்த பதிரனா அடுத்து வந்த சூரியகுமாரை அதே ஓவரில் ரஹ்மானின் அபார கேட்ச்சால் டக் அவுட்டாக்கினார். ஆனாலும் எதிர்ப்புறம் தொடர்ந்து மிரட்டிய ரோகித் சர்மா அரை சதமடித்துக்கு அச்சுறுத்தலை கொடுத்தார். அவருடன் சேர்ந்து 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த திலக் வர்மா 31 (20) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த கேப்டன் பாண்டியா 2 (6) ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதற்கடுத்ததாக வந்த டிம் டேவிட் 13 (5), செபார்ட் 1 (2) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் அப்போது வந்த முகமது நபியும் 4* (7) ரன்கள் மட்டுமே எடுத்து பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் எதிர்ப்புறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 11 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 105* (63) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் மும்பையை 186/6 ரன்களுக்கு கட்டுப்படுத்திய சென்னை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

இதையும் படிங்க: 6, 6, 6.. மும்பையில் மிரட்டிய ருதுராஜ், துபே.. மாஸ் ஃபினிஷிங் செய்த தல தோனி.. சிஎஸ்கே அணிக்காக அபார சாதனை

அதனால் நாட் அவுட்டாக இருந்த ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக ரோகித் சர்மா தோல்வியை சந்தித்தார். இதற்கு முன் டெக்கான் மற்றும் மும்பை அணிக்காக 18 முறை நாட் அவுட்டாக இருந்த போட்டியில் அவர் வெற்றியை மட்டுமே சந்தித்திருந்தார். அத்துடன் பரம எதிரி மும்பையை கடைசி 5 போட்டிகளில் 4வது முறையாக சென்னை வென்றது. மறுபுறம் அசத்தலாக பந்து வீசி நான்காவது வெற்றியை பெற்ற சென்னைக்கு அதிகபட்சமாக குட்டி மலிங்கா பதிரனா 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதை விட தோனி எடுத்த 20 ரன்கள் தான் கடைசியில் சென்னைக்கு வெற்றியாக கிடைத்தது ஆச்சரியம்.

Advertisement