- Advertisement -
ஐ.பி.எல்

இதான் என்னோட ஆசை.. 2024 ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய பதிரனா? மெசேஜால் சிஎஸ்கே ரசிகர்கள் கவலை

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பெறுவதற்காக கடுமையான போட்டி காணப்படுகிறது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 6 வெற்றி 5 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் பிளே ஆஃப் செல்வதற்கு அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை இருக்கிறது.

அந்த சூழ்நிலையில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்ட முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஜிம்பாப்வே தொடரில் பங்கேற்பதற்காக சென்னை அணியிலிருந்து விலகினார். அது ஏற்கனவே சென்னைக்கு பின்னடைவை கொடுத்த நிலையில் மற்றொரு முதன்மை வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரனா பஞ்சாப்புக்கு எதிரான கடந்த போட்டியில் விளையாடவில்லை.

- Advertisement -

விலகிய பதிரனா:
சொல்லப்போனால் விசா சம்பந்தமாக அவரும் தீக்சனாவும் இலங்கை சென்று விட்டு மீண்டும் சென்னை அணியில் இணைந்தனர். அதில் பதிரனா லேசான காயத்தை சந்தித்ததால் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அந்த சூழ்நிலையில் பஞ்சாப் போட்டி முடிந்ததும் காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக பதிரனா மீண்டும் இலங்கைக்கு திரும்பியதாக செய்திகள் வெளி வந்தன.

அதனால் விரைவில் குணமடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பாக அவர் சென்னை அணியில் இணைந்து விடுவார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் அவருடன் காத்திருந்தனர். இந்நிலையில் 2024 தொடரிலிருந்து காயத்தால் முழுமையாக விலகுவதாக பதிரனா மறைமுகமாக அறிவித்துள்ளார். மேலும் 2024 ஐபிஎல் கோப்பை சென்னை அணியின் அறையில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே தம்முடைய ஆசை என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “மிகவும் கடினமான குட் பாய். 2024 ஐபிஎல் சாம்பியன் கோப்பை விரைவில் சிஎஸ்கே அணியின் அருகில் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஒரே ஆசையாகும். இந்த தொடரில் விளையாடிய போது சிஎஸ்கே அணி மற்றும் சென்னையில் கிடைத்த ஆசீர்வாதங்களுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 31/3 என சரிந்த போது வேணும்னே சிங்கிள் எடுத்தேன்.. 360 டிகிரி சூரியகுமார் இருந்தாரு.. திலக் வர்மா பேட்டி

அத்துடன் தோனி மற்றும் சென்னை அணியுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் சேர்த்து பதிவிட்டுள்ளார். கடந்த வருடம் மிகச் சிறப்பாக பந்து வீசி சென்னை 5வது கோப்பையை வெல்ல உதவிய அவர் தற்போது இப்படி காயத்தால் விலகியுள்ளது சிஎஸ்கே ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் ஏற்கனவே தீபக் சஹர் காயத்தால் விலகிய நிலையில் தற்போது இவரும் வெளியேறியுள்ளார். போதாக்குறைக்கு முஸ்தபிசூர் ரஹ்மானும் இல்லாததால் இருக்கும் பவுலர்களை வைத்து பிளே ஆஃப் செல்ல வேண்டிய பரிதாபத்திற்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -