இத்தனை கேட்ச்சா மிஸ் பண்ணுவீங்க ? 3 முறை எளிதான வாய்ப்பை தவறவிட்ட இந்திய வீரர்கள் – ரசிகர்கள் அதிருப்தி

Umesh
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை குவித்து இருந்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 74 ரன்களை அடித்திருந்தார். இந்நிலையில் இன்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி மேலும் 11 ரன்கள் சேர்த்து 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

kohli

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி சார்பாக ஸ்டார்க் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்கு பிடிக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் மட்டும் ஓரளவு சுதாரித்து 73 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இரண்டாம் நாள் மூன்றாவது செஷன் வரை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி 53 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி இளம் வீரரான லாகேபுஷன் மூன்று முறை எளிய கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பினார்.

Ashwin

அதிலும் குறிப்பாக தான் சந்தித்த மூன்றாவது பந்துகளில் ரன் ஏதும் எடுக்காத போது கீப்பர் சகா அவரது கேட்சியை தவற விட்டார். அதன் பிறகு 12 ரன்கள் இருக்கும் போது பும்ரா கேட்சை தவறவிட்டார். அதன்பிறகு 21 ரன்கள் இருக்கும் போது ப்ரித்வி ஷா தவறவிட்டார். இப்படி மூன்று கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பியவர் இறுதியில் உமேஷ் யாதவும் மூலம் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். அவர் ஆட்டம் இழக்கும்போது 47 ரன்கள் குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

marnus

முதலிலேயே அவர் விக்கெட்டை வீழ்த்தி இருந்தால் இன்னும் இந்தியாவிற்கு கூடுதல் சாதகமாக அமைந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இத்தனை வாய்ப்புகளை கொடுத்ததை ரசிகர்கள் சுட்டிக்காட்டி சமூகவலைதளத்தில் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். மேலும் இத்தனை கேட்ச்சையா ஒருவருக்கு விடுவது ? என்று இந்திய அணியின் பீல்டிங்கை குறைபாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement