IND vs ENG : அரையிறுதியில் மேலும் ஒரு வீரர் காயத்தால் விலக வாய்ப்பு – எல்லாமே நமக்கு நல்லது தான்

Mark-Wood
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் விளையாட நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ள வேளையில் குரூப் இரண்டில் முதல் அணியாக தேர்ச்சி பெற்ற இந்திய அணியானது வரும் நவம்பர் 10-ஆம் தேதி அடிலெயிடு கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பலப்பரீட்சை நடத்த இருக்கிறது.

INDvsENG

இந்நிலையில் இந்த போட்டிக்காக அடிலெயிடு சென்றடைந்துள்ள இரு அணி வீரர்களும் தற்போது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மறுதினம் நடைபெற இருக்கும் இந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்து வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் இங்கிலாந்து அணியில் ஏற்கனவே நட்சத்திர பேட்ஸ்மனான டேவிட் மலான் தசைப்பிடிப்பு காரணமாக அந்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான மார்க் வுட் காயத்தால் அவதிப்பட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Mark Wood 1

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி சாம் கரனுக்கு அடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். அவரது இந்த காயத்தினால் பயிற்சி போட்டியில் விளையாடாத அவர் அரையறுதி போட்டியில் விளையாடுவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசி பேட்ஸ்மேன்களை திணறவைக்கும் மார்க் உட் இந்த அரையிறுதி போட்டியில் விளையாடவில்லை என்றால் அது இந்திய அணிக்கு ஒரு கூடுதல் சாதகம் என்று கூறலாம்.

இதையும் படிங்க : எல்லா மேட்ச்லயும் அவர் சூப்பர் ஹீரோ மாதிரி வந்து காப்பாத்த மாட்டாரு – செமி பைனலுக்கு முன்பாக இந்தியாவை எச்சரித்த ஓஜா

அரையிறுதி போட்டி தற்போது அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நெருங்கி வரும் வேளையில் இங்கிலாந்து அணியில் அடுத்தடுத்து வீரர்கள் காயத்தினால் அவதிப்பட்டு வருவது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

Advertisement