அப்படின்னா எதுக்கு நாட்டுக்காக ஆடுறிங்க.. உங்களுக்கு சம்பளம் எதுக்கு.. குக் கருத்தை விளாசிய மார்க் வாக்

Mark Waugh
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. மறுபுறம் பஸ்பால் அணுகு முறையை பின்பற்றி டி20 போல சரவெடியாக விளையாடி இந்தியாவை வீழ்த்துவோம் என்று சொன்ன இங்கிலாந்து முதல் போட்டியில் வென்றது. அதனால் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற அந்த அணி இந்தியாவை வீழ்த்தும் என்று நாசர் ஹுசைன், அலஸ்டர் குக் போன்ற முன்னாள் வீரர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஆனால் அதன் பின் சுதாரித்து விளையாடி சொல்லி அடித்தது விளையாடிய இந்தியா கடைசி 4 போட்டிகளில் வென்று எங்களை அவ்வளவு சுலபமாக சொந்த மண்ணில் வீழ்த்த முடியாது என்பதை இங்கிலாந்துக்கு காண்பித்தது. மறுபுறம் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் சொதப்பிய இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்து நாடு திரும்பியது.

- Advertisement -

எதுக்கு சம்பளம்:
அதனால் பஸ்பால் அணுகு முறையை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு முன்னேறும் வழியை பாருங்கள் என்று இங்கிலாந்து அணியை நாசர் ஹுசைன் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அந்த தோல்வியை ஒப்புக்கொள்ளாத மற்றொரு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அல்ஸ்டர் குக் தங்களுடைய வீரர்கள் ரோபோட் கிடையாது என விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

எனவே நம்முடைய வீரர்களும் மனிதர்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு இங்கிலாந்தை சேர்ந்தவர்களை அலெஸ்டர் குக் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் அலெஸ்டர் குக் இப்படி சொன்ன கருத்தை தம்மால் நம்ப முடியவில்லை என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக் கூறியுள்ளார். குறிப்பாக ரோபோட் கிடையாது என்று சொன்னால் எதற்காக இங்கிலாந்து வீரர்கள் நாட்டுக்காக விளையாடுகின்றனர்? எதற்கு அவர்களுக்கு சம்பளம்? என்றும் மார்க் வாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ட்விட்டரில் மார்க் வாக் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “அலெஸ்டர் குக்’கிடம் இருந்து இப்படி கேட்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு சர்வதேச வீரராக இதற்காகத் தான் நீங்கள் கடினமாக பயிற்சிகளை செய்து விளையாடுகிறீர்கள். அதற்காகவே உங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. எனவே ஒரு சர்வதேச வீரராக நீங்கள் செல்வதற்கு இது சிறந்த சுற்றுப்பயணமாக இருந்தது” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தனித்துவமான திறமை கொண்டுள்ள அவர் கண்டிப்பா ஜாம்பவான்கள் லிஸ்ட்ல வருவாரு.. மெக்ராத் பாராட்டு

இந்த நிலையில் அடுத்தடுத்த தோல்விகளால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து 9வது இடத்திற்கு சரிந்துள்ளது. அதனால் அடுத்த வருடம் ஜூன் மாதம் தங்களுடைய சொந்த ஊரான லண்டனில் நடைபெறும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இங்கிலாந்து மூன்றாவது முறையாக தகுதி பெறாமல் வெளியேறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement