தனித்துவமான திறமை கொண்டுள்ள அவர் கண்டிப்பா ஜாம்பவான்கள் லிஸ்ட்ல வருவாரு.. மெக்ராத் பாராட்டு

Glenn McGrath
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் போன்ற சுழல் பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்து இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினர்.

அப்படி சிறப்பாக செயல்பட்ட ஸ்பின்னர்களுக்கு நிகராக இந்த தொடரில் அசத்திய இந்திய அணியின் ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்றால் அது ஜஸ்பிரித் பும்ரா என்றே சொல்லலாம். ஏனெனில் 4 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை 16.89 என்ற அபாரமான சராசரியில் எடுத்த அவர் இந்த தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சனை விட சிறப்பாக செயல்பட்டு அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்தார்.

- Advertisement -

லெஜெண்ட்டாக வருவாரு:
குறிப்பாக ராஜ்கோட் நகரில் நடந்த 3வது போட்டியில் ஓலி போப் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருடைய ஸ்ட்ம்புகள் பறக்கும் அளவுக்கு துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி அவர் எடுத்த விக்கெட்டுகளை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அப்படி சிறப்பாக செயல்பட்ட பும்ரா டாப் 10 ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சளார் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

அதன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான ஐசிசி தரவரிசையிலும் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் பவுலர் என்ற தனித்துவமான சாதனையையும் பும்ரா படைத்தார். இந்நிலையில் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் பும்ரா கேரியரை முடிக்கும் போது ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர்களின் பட்டியலில் இருப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிளன் மெக்ராத் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக பும்ரா அங்கே இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. காயத்தால் சிறிது நலம் உட்கார வேண்டியிருந்தாலும் அவர் தரம் வாய்ந்தவர். அவர் பந்து வீசும் விதத்தில் மிகவும் தனித்துவமானவர். அவரிடம் சிறப்பான அணுகுமுறையும் இருக்கிறது”

இதையும் படிங்க: ரோஹித்தை விட அஸ்வினை மிகச்சரியாக கையாண்ட பும்ரா.. இரண்டாவது இன்னிங்சில் நடந்த சம்பவம் – விவரம் இதோ

“நாள் முழுவதும் கடினமாக ஓடும் அவர் சரியான இடங்களில் நல்ல வேகத்தில் பந்து வீசுகிறார். பெரும்பாலான மற்ற பவுலர்களை விட அவரிடம் வித்தியாசமான ரன் அப் மற்றும் ஆக்சன் இருக்கிறது. அதை வைத்து அவர் விக்கெட்டுகள் எடுத்து வெற்றிகரமாக செயல்படுவதற்கான வழியை கண்டறிந்துள்ளார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து பும்ரா உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement