PAK vs NZ : 150 கி.மீ பாக் பவுலர்களை தெறிக்க விட்ட மார்க் சேப்மேன் – 2 தனித்துவ உலக சாதனையுடன் படைத்த 4 சாதனைகள் இதோ

Mark Chapman
- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கியது. டாம் லாதம் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய அந்த அணியை முதலிரண்டு போட்டிகளில் தோற்கடித்த பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இருப்பினும் 3வது போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நியூசிலாந்து பதிலடி கொடுத்த நிலையில் 4வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 193/5 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 7 பவுண்டரி 4 சிக்சருடன் 98* (62) ரன்கள் எடுக்க நியூஸிலாந்து சார்பில் அதிகபட்சமாக ப்ளாக் டிக்னர் 3 விக்கெட்களை எடுத்தார். அதை தொடர்ந்து 194 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு டாம் லாதம் 0, பௌஸ் 19, வில் எங் 4, டார்ல் மிட்சேல் 15 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 73/4 என தடுமாறிய அந்த அணியின் வெற்றி கேள்விக்குறியான போது ஜோடி சேர்ந்த மார்க் சேப்மேன் – ஜிம்மி நீசம் ஆகியோர் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் நின்று பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடி 19.2 ஓவரிலேயே 194/4 ரன்கள் எடுக்க வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

உலக சாதனைகள்:
அதில் மார்க் சாப்மேன் 11 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 104* (57) ரன்களும் ஜிம்மி நீசம் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 45* (25) ரன்களும் எடுத்து வெற்றி பெற வைத்தனர். முன்னதாக கடந்த வருடம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளிடம் சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்து சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்ற பாகிஸ்தானை இந்தத் தொடரிலும் வெல்ல விடாத நியூசிலாந்து 2 – 2 (5) என்ற கணக்கில் சமன் செய்து கோப்பையை பகிர்ந்து கொண்டது.

குறிப்பாக ஐபிஎல் தொடரில் விளையாடும் டேவோன் கான்வே போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் 2வது தர அணி தங்கள் நாட்டுக்கு வந்துள்ளதாக விமர்சித்த அப்துல் ரசாக் போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்கும் நியூசிலாந்து பதிலடி கொடுத்துள்ளது. அதே போல் 150 கி.மீ வேகத்தில் பந்து வீசும் ஷாஹீன் அப்ரிடி, ஹாரீஸ் ரவூப் போன்ற பாகிஸ்தான் பவுலர்களை 182.46 ஸ்ட்ரைக் ரேட்டில் தெறிக்க விட்ட மார்க் சேப்மேன் ஆட்டநாயகன் விருதை வென்றார். அத்துடன் 104*, 71*, 16*, 65*, 34 என இந்த தொடரின் 5 போட்டிகளிலும் 290 ரன்களை 290.00 என்ற சராசரியில் விளாசி அதிக ரன்கள் குவித்த வீரராக அசத்திய அவர் தொடர் நாயகன் விருதையும் என்றார்.

- Advertisement -

1. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சராசரியில் ரன்களை குவித்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. மார்க் சேப்மேன் : 290 – பாகிஸ்தானுக்கு எதிராக, 2023*
2. கிளன் மேக்ஸ்வெல் : 211 – இலங்கைக்கு எதிராக, 2016
3. விராட் கோலி : 199 – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2016

2. அத்துடன் 5வது இடத்தில் களமிறங்கி சதமடித்து வெற்றி பெற வைத்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட ஒரு போட்டியில் 5 அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி சதமடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையும் படைத்தார்.

- Advertisement -

3. அது போக ஏற்கனவே ஹாங்காங் நாட்டுக்காக விளையாடிய அவர் தற்போது நியூசிலாந்துக்காக தன்னுடைய முதல் சதமடித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடிய வீரர்களில் குறைந்தது ஒரு நாட்டுக்கு சதமடித்த முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு கேப்ளர் வெசல்ஸ், கேரி பேலன்ஸ், இயன் மோர்கன் போன்றவர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே 2 நாடுகளுக்கு விளையாடி குறைந்தது 1 நாட்டுக்கு சதமடித்திருந்தனர்.

இதையும் படிங்க:GT vs MI : பும்ரா எங்கய்யா இருக்க, டெத் ஓவர்களில் அடித்து நொறுக்கிய குஜராத் சாதனை ஸ்கோர் – மும்பை மோசமான பவுலிங் சாதனை

4. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் மண்ணில் சதமடித்த முதல் வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற வரலாற்றையும் அவர் படைத்தார். இதற்கு முன் இங்கிலாந்தின் பில் சால்ட் 88* ரன்கள் அடித்ததே பாகிஸ்தான் மண்ணில் வெளிநாட்டு பேட்ஸ்மேன் பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோராகும்.

Advertisement