ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் தேதி நடைபெறுகிறது. இங்கிலாந்தில் உள்ள லண்டனில் நடைபெறும் அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 2023 முதல் நடைபெற்று வந்த லீக் தொடர்களில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற தென்னாப்பிரிக்கா முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது.
அதே போல இந்தியாவை தங்களுடைய சொந்த மண்ணில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 2வது அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெறும் இறுதிப் போட்டியில் கோப்பையை வென்று 3வது டெஸ்ட் சாம்பியனாக சாதனை படைக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அவ்விரு அணிகளைப் பொறுத்த வரை அழுத்தமான ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடிய வரலாற்றைக் கொண்டுள்ளது.
சோக்கர்ஸ் பட்டம்:
குறிப்பாக 1999, 2023 உலகக் கோப்பை செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த ஆஸ்திரேலியா 5 கோப்பைகளை வென்றுள்ளது. 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து நடப்பு சாம்பியனாக திகழும் ஆஸ்திரேலியா இம்முறையும் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் தென்னாப்பிரிக்கா ஐசிசி தொடர்களில் சொதப்புவதற்கு பெயர் போன அணியாக வலம் வருகிறது.
அதனால் சோக்கர்ஸ் என்ற பட்டத்தைக் கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா இம்முறை வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா? என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த காலங்களில் தாங்கள் சிறப்பாக விளையாடதால் உருவான ஃசோக்கர்ஸ் பட்டதை தற்போதைய தென்னாபிரிக்க அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று தூக்கி எறியும் என்று மார்க் பவுச்சர் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
பவுச்சர் நம்பிக்கை:
“நாங்கள் கோப்பைக்காக விளையாடுகிறோம். எங்களால் கோப்பையை வெல்ல முடியாது என்று நிறைய மக்கள் சொல்கிறார்கள். ஆனால் டெஸ்ட் போட்டிகள் வித்தியாசமான உணர்வைக் கொடுக்கும். நீண்ட காலமாக நடைபெற்று வரும் அந்தப் போட்டிகளில் நீங்கள் வெல்வதற்கு பெரிய தருணங்களையும் வெல்ல வேண்டும். கோப்பையை வெல்லும் வரை சோக்கர்ஸ் என்ற பட்டம் எங்கள் மீது தூக்கி எறியப்படும்”
இதையும் படிங்க: உலகிலேயே இந்தியாவால் மட்டும் அதை வேகமா செய்ய முடியும்.. ரோஹித், கோலி இல்லாதது குறித்து பாண்டிங்
“எங்களுடைய இளம் வீரர்கள் அந்தப் பெயரை பெறுவதற்கு தகுதியானவர்களா? என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. கடந்த காலங்களில் நடந்தவைகளால் எங்களின் தற்போதைய இளம் வீரர்கள் அந்த பாரமாக சுமந்து வருகிறார்கள். ஆனால் அந்த வீரர்கள் தான் தற்சமயத்தில் வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகிறவர்களாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.



