உலகிலேயே இந்தியாவால் மட்டும் அதை வேகமா செய்ய முடியும்.. ரோஹித், கோலி இல்லாதது குறித்து பாண்டிங்

Ricky Ponting
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20ஆம் தேதி முதல் துவங்கும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது. சமீபத்தில் இந்திய கிரிக்கெட்டின் இரு துருவங்களாக அறியப்படும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றார்கள்.

கடந்த காலங்களில் அவர்களைப் போன்ற ஜாம்பவான் வீரர்கள் விளையாடும் இந்திய அணியால் இங்கிலாந்தில் வெற்றி பெற முடியவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இளம் இந்திய வீரர்கள் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுப்பார்களா? என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற தரமான வீரர்களின் இடத்தை நிரப்புவது கடினம் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தியா மட்டுமே:

ஆனால் உலகிலேயே இந்திய அணியால் மட்டுமே அவர்களைப் போன்ற ஜாம்பவான் வீரர்களின் இடத்தை வேகமாக நிரப்ப முடியும் அவர் பாராட்டியுள்ளார். எடுத்துக்காட்டாக கடந்த ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு பெற்ற ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி ஓப்பனிங் இடத்தை பிடித்ததாகவும் பாண்டிங் தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“விராட், ரோஹித் போன்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடிய தரமான வீரர்களை நிரப்புவது மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் ஏதேனும் ஒரு நாடு அதை வேகமாக செய்யுமேயானால் அது இந்தியாவாக இருக்கும். ஏனெனில் அவர்களிடம் திறமையான இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அதைக் கடந்த 10 வருடங்களாக நான் ஐபிஎல் தொடரில் பார்த்து வருகிறேன்”

- Advertisement -

பாண்டிங் பாராட்டு:

“அங்கிருந்து வந்த ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வந்து உடனடியாக இந்தியாவுக்காக அசத்துவதை நம்மால் பார்க்க முடிகிறது. திறனை மாற்றுவது ஒரு அம்சமாகும். அந்த திறனை இந்திய அணியால் எளிதாக மாற்ற முடியும். ஆனால் அனுபவம் மட்டுமே தவற விடப்படும். சுப்மன் கில் போன்ற இளம் வீரர் கேப்டனாக இருக்கும் இந்திய அணியில் இப்போதும் பும்ரா, ராகுல் உள்ளிட்ட அனுபவமிக்கவர்கள் இருக்கிறார்கள்”

இதையும் படிங்க: ஆயுஷ் மாத்ரேவுக்கு இடமில்லை.. ஐபிஎல் 2025 கனவு அன்கேப்ட் லெவனை தேர்ந்தெடுத்த ஆகாஷ் சோப்ரா

“இந்தியா தற்சமயத்தில் மறு சீரமைக்கும் நிலையில் இருக்கிறது. அதை உலகில் மற்ற அணிகளைக் காட்டிலும் இந்தியா சிறப்பாக கையாளும் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார். அவர் கூறுவது போல நிதிஷ் ரெட்டி உள்ளிட்ட இளம் வீரர்கள் இந்தியாவுக்காக தங்களால் அசத்த முடியும் என்பதை சமீப காலங்களில் காண்பித்துள்ளது.

Advertisement