ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்ற முடிந்தது. 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற அத்தொடரின் முடிவில் பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இளம் இந்திய வீரர்களை வைத்து 11 பேர் கொண்ட தம்முடைய கனவு அணியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்ந்தெடுத்துள்ளார்.
அந்த அணியில் ஆயுஷ் மாத்ரே இடம் பெறாதது ஆச்சரியமாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக பாதியில் தேர்வாகி அட்டகாசமாக விளையாடிய அவர் அதிக ரன்கள் குவித்து நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். இருப்பினும் அவரை தேர்ந்தெடுக்காத ஆகாஷ் சோப்ரா தம்முடைய அன்கேப்ட் அணி பற்றி பேசியது பின்வருமாறு.
கனவு அன்கேப்ட் அணி:
“என்னுடைய அணியை பஞ்சாப்பை சேர்ந்த பிரியான்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் ஆகியோருடன் துவங்குவேன். ஏனெனில் அவர்கள் தான் பஞ்சாப்பை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்கள். 3வது இடத்தில் வைபவ் சூரியவன்சியை வைத்திருப்பேன். ஏனெனில் 14 வயது குழந்தை சதம் அடிப்பது தலைமுறையில் ஒருமுறை மட்டுமே நடக்கும். அவர் அந்த சதத்துடன் நிற்கவில்லை. அதன் பின்பும் சிறப்பாக விளையாடினார்”
“ஆயுஷ் மாத்ரேவுடன் ஒப்பிடுகையில் அவரை நான் தேர்ந்தெடுக்கிறேன். சசாங் சிங் பஞ்சாப் ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார். இறுதிப் போட்டியில் கூட அவர் ஹேசல்வுட்’க்கு எதிராக 3 சிக்ஸர்களை 4 பந்தில் அடித்து அசத்தினார். ஃபைனலில் வெற்றி பெறாவிட்டாலும் குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாடிய முக்கியமான ஆட்டம் உங்களுக்கு நினைவிருக்கலாம்”
திறமையான இளம் அணி:
“எனவே சசாங் என்னுடைய அணியின் கேப்டனாகவும் இருப்பார். அவர்களைத் தொடர்ந்து டெல்லி அணிக்காக விளையாடிய விப்ராஜ் நிகாம் சிறப்பான ஆல் ரவுண்டர். இத்தொடரின் ஒரு கண்டுபிடிப்பு என்று நான் கருதும் விப்ராஜ் விரைவில் இந்தியாவுக்காக விளையாடுவார். சுழல், வேகம் ஆகிய 2 வகையான பந்துகளையும் வீசும் அவர் தைரியத்துடன் பவர் பிளே மற்றும் மிடில் ஓவர்களில் பவுலிங் செய்தார்”
இதையும் படிங்க: அவங்களுக்கு இது தெரியாது.. இந்தியா நல்ல டைமிங்கில் பும்ரா முடிவை எடுத்துருக்காங்க.. பாண்டிங் பேட்டி
“அந்த வகையில் மிகச்சிறந்த திறமை மற்றும் பொறுமையைக் கொண்டுள்ள அவர் பேட்டிங்கிலும் அசத்தினார்” என்று கூறினார். ஆகாஷ் சோப்ரா கனவு அன்கேப்ட் அணி: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஸ் ஆர்யா, வைபவ் சூர்யவன்சி, நேஹல் வதேரா, சசாங் சிங் (கேப்டன்), நமன் திர், விப்ராஜ் நிகாம், ஹர்ப்ரீத் ப்ரார், யாஷ் தயாள், விஜய்குமார் வைசாக், அன்சுல் கம்போஜ்



