அவங்களுக்கு இது தெரியாது.. இந்தியா நல்ல டைமிங்கில் பும்ரா முடிவை எடுத்துருக்காங்க.. பாண்டிங் பேட்டி

Ricky Ponting 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அப்போது ரோஹித் சர்மாவுக்கு பின் ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக நியமனம் செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஏனெனில் கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா இல்லாத போது கேப்டனாக செயல்பட்ட அவர் 8 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற வைத்தார். இருப்பினும் அதே தொடரில் காயத்தை சந்தித்த அவர் தொடர்ச்சியாக விளையாடுவதற்கு தடுமாறுகிறார். எனவே காயத்தைக் கருத்தில் கொண்டு அவரை புறக்கணித்த பிசிசிஐ சுப்மன் கில்லை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்தது.

- Advertisement -

டைமிங்கில் 2 முடிவு:

இருப்பினும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் பெரிய ரன்கள் குவித்திராத அவர் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்றவர் என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் விமர்சனம் செய்பவர்களுக்கு ஜஸ்ப்ரித் பும்ராவின் நிலைமை பற்றி தெரியாது என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது நிலையைப் புரிந்து கொண்டுள்ள பிசிசிஐ சரியான டைமிங்கில் 2 முடிவுகளை எடுத்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி ஐசிசி ரிவ்யூ நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் இது சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன். ஜஸ்ப்ரித் பும்ராவை ஏன் கேப்டனாக தேர்ந்தெடுக்காமல் சுப்மன் கில்லை நியமனம் செய்துள்ளார்கள் என்று சில பண்டிதர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதற்கான காரணம் மிகவும் எளிதானது. அதாவது கடந்த சில வருடங்களாகவே பும்ராவை காயங்கள் பிடித்து வருகிறது”

- Advertisement -

பாண்டிங் பாராட்டு:

“உங்களுடைய கேப்டன் அடிக்கடி காயத்தை சந்தித்து வருவதும் போவதுமாக இருப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். எனவே இது சரியான முடிவு என்று நான் கருதுகிறேன். கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை சுப்மன் கில் நன்றாக வழி நடத்தினார். எனவே கேப்டன்ஷிப் அவரிடம் நன்றாக உட்காரும். கேப்டனாக இருக்கும் போது ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் ரன்கள் குவிப்பது முக்கியம்”

இதையும் படிங்க: அர்ஷ்தீப் சிங்கிடம் அந்த திறமை இருக்கு.. அவருக்கு அறிமுக வாய்ப்பு தாங்க – ஆதரவு தெரிவித்த ரிக்கி பாண்டிங்

“அதை ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் செய்தார். எனவே இந்த டைமிங் மிகவும் சரியானது என்று நான் நினைக்கிறேன். முன்னோக்கிச் செல்லும் போது உங்களுக்கு அவர் நிறைய ரன்கள் அடிக்கக்கூடிய நல்ல கேப்டனாக செயல்படுவார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து முதல் போட்டி ஜூன் இருபதாம் தேதி துவங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement