இந்திய வீரர்கள் வேறலெவல். இந்தியாவில் விளையாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் – மனம் திறந்த ஆஸி வீரர்

australianteam
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் ஆன மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 41 ஒருநாள் போட்டிகளிலும், 19 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு பெங்களூர் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Stoinis

- Advertisement -

இந்நிலையில் தற்போது அவர் அமேசான் வெப்சீரிஸ் ஒன்றுக்கு இந்திய அணி குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : 2018-19 ஆம் ஆண்டில் விராட்கோலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு வந்து ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும், டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

அப்பொழுது இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தை கண்டு தான் வியந்ததாக கூறியுள்ளார். மேலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மிகவும் ஆச்சரியத்தை அளித்தது. இந்திய அணி எப்போதும் ஒரு திறமையான அணி என்பதால் அந்த வெற்றி அவர்களுக்கு பெரிதல்ல.

Stoinis 1

மேலும் இந்திய அணியில் விளையாடும் வீரர்களைத் தவிர இந்தியாவில் உள்நாட்டு தொடர்களில் ஆடும் வீரர்கள் கூட என்னைவிட சிறப்பாக ஆடுகின்றனர் என்றும் அவர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் : இந்திய வீரர்கள் அனைவரும் தன்னம்பிக்கையுடன் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

- Advertisement -

அதனாலேயே அவர்களால் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க முடிகிறது. எனக்கு இந்தியாவில் விளையாடுவது எப்போதும் பிடிக்கும். இந்தியர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் வரவேற்பு போன்றவை வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை தருகிறது. மேலும் எப்பொழுது இந்தியாவில் விளையாடினாலும் ரசிகர்கள் வீரர்களை உற்சாகப்படுத்து கின்றனர். மேலும் நான் ஐபிஎல் தொடரில் விளையாடும் போதும் ரசிகர்களின் வரவேற்பு எனக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் ரசிகர்களிடையே விளையாடும் சூழல் மிக அற்புதமான ஒன்று. அது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் அனைவருக்கும் அனுபவிக்க வேண்டிய ஒரு விடயமாகும். இந்திய அணியுடன் நான் மோதும் போட்டிகளை மிகவும் எதிர்பார்த்து விளையாடுகிறேன். ஏனெனில் அவர்களுக்கு எதிரே விளையாடும்போது அது மிகச்சிறந்த அனுபவத்தைத் தரும் என்று ஸ்டாய்னிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement