LSG vs PBKS : பஞ்சாப்க்கு எதிரான அதிரடிக்கு காரணம் இதுதான். அதோட எனக்கு கொஞ்சம் பொறுப்பும் இருக்கும் – ஸ்டாய்னிஸ் பேட்டி

Stoinis
- Advertisement -

மொகாலி நகரில் நேற்று நடைபெற்ற 38-வது ஐபிஎல் லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி ஷிகார் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

Stoinis 1

- Advertisement -

அதனை தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்க லக்னோ அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களின் முடிவில் 257 ரன்களை குவிக்க பின்னர் 258 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. மிகப்பெரிய இலக்கை நோக்கி போராடி துரத்திய பஞ்சாப் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதன் காரணமாக லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி பெற்ற வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக ஸ்டாய்னிஸ் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் பேட்டிங்கின் போது நான்காவது வீரராக களமிறங்கிய அவர் 40 பந்துகளை சந்தித்து ஆறு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் என 72 ரன்கள் குவித்து அசத்தினார். அதோடு பந்து வீச்சிலும் முதல் ஓவரை வீசிய ஸ்டாய்னிஸ் அந்த ஓவரிலேயே விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

Stoinis 2

இப்படி பேட்டிங்கில் 72 ரன்களையும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் எடுத்த மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்க்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ஸ்டாய்னிஸ் கூறுகையில் : இப்போது என்னுடைய விரலில் ஏற்பட்ட காயம் சற்று நன்றாக குணமடைந்துள்ளது. இருந்தாலும் நாங்கள் ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டு அதிலும் காயம் நன்றாக இருப்பதை உறுதி செய்துள்ளோம்.

- Advertisement -

இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங்கின் போது பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க நினைத்தோம். அந்த வகையில் ஆயுஷ் பதோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அவருடன் சேர்ந்து நானும் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தேன். லக்னோ அணியின் மிடில் ஆர்டரில் நன்றாக விளையாடி போட்டியை முடித்துக் கொடுக்கும் பொறுப்பு என்னிடமும் உள்ளது. எனவே அதனை நான் கையில் எடுத்தேன். என்னுடைய கிரிக்கெட் கரியரில் நான் அனைத்து இடங்களிலும் பேட்டிங் இறங்கியுள்ளேன்.

இதையும் படிங்க : PBKS vs LSG : லக்னோ அணிக்கெதிராக நான் போட்ட தப்பு கணக்கு தான் தோல்விக்கு காரணம் – ஷிகார் தவான் வருத்தம்

அந்த வகையில் இந்த போட்டியில் நான்காவது வீரராக களம் இறங்கியதும் வலைப்பயிற்சியில் அடிப்பது போன்றே பந்தை அடித்து விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் எனக்கு ரன்களும் வந்தன. மொத்தத்தில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement