PBKS vs LSG : லக்னோ அணிக்கெதிராக நான் போட்ட தப்பு கணக்கு தான் தோல்விக்கு காரணம் – ஷிகார் தவான் வருத்தம்

Dhawan
- Advertisement -

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் போட்டி நேற்று மொஹாலி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது 56 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகார் தவான் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

Stoinis

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடி காட்ட ஸ்கோர் மளமளவென்று உயர்ந்தது. துவக்க வீரர் முதல் ஏழாவதாக களமிறங்கிய க்ருனால் பாண்டியாவரை அனைவருமே பவுண்டரிகளாக விலாச ஸ்கோர் இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்களை தொட்டது. அதோடு ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது.

அதனை தொடர்ந்து 258 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி இறுதி வரை போராடியும் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 201 ரன்களை மட்டுமே அவர்களால் குவிக்க முடிந்தது. இதன் காரணமாக 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. லக்னோ அணி சார்பாக நவீன் உல் ஹக் 4 ஓவர்களை வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Naveen Ul Haq

இந்த போட்டியில் பேட்டிங்கில் 72 ரன்களையும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய லக்னோ அணியின் ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்களது அணி பெற்ற தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகார் தவான் கூறுகையில் :

- Advertisement -

நாங்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம். அதுவே தோல்விக்கான முக்கிய காரணம். அதுமட்டும் இன்றி சேசிங்கின் போதும் நான் விரைவில் ஆட்டம் இழந்துவிட்டேன். பந்து சற்று நின்று வந்ததால் நான் அடித்த பந்து பீல்டரின் கைக்கு சென்று நான் ஆட்டம் இழந்தேன். இந்த போட்டியில் கூடுதலாக ஒரு பவுலருடன் செல்ல வேண்டும் என்று நான் யோசித்த யுக்தி செயல்படாமல் போனது. இந்த போட்டியில் நாங்கள் ஒரு ஸ்பின்னரை தவற விட்டுள்ளோம்.

இதையும் படிங்க : LSG vs PBKS : 250 ரன்களுக்கு மேல் அடிச்சி நாங்க பெற்ற இந்த அசத்தலான வெற்றிக்கு இதுதான் காரணம் – கே.எல் ராகுல் பேட்டி

இதுபோன்ற தோல்விகள் தான் எங்களுக்கு சரியான பாடத்தை கற்றுத் தரும். அந்த வகையில் இனி பவுலர்களின் தேர்வில் கவனமாக இருப்பேன். அதோடு ஷாருக்கானுக்கு முன்னதாக லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன் போன்ற வீரர்கள் இருந்ததால்தான் ஷாருக்கானை முன்கூட்டியே அனுப்ப முடியவில்லை என்றும் ஷிகார் தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement