LSG vs PBKS : 250 ரன்களுக்கு மேல் அடிச்சி நாங்க பெற்ற இந்த அசத்தலான வெற்றிக்கு இதுதான் காரணம் – கே.எல் ராகுல் பேட்டி

KL Rahul
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் போட்டியானது நேற்று மொஹாலி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ஷிகார் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்றைய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

LSG vs PBKS

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 257 என்கிற இமாலய ரன் குவிப்பை வழங்கியது. லக்னோ அணி சார்பாக ஸ்டோய்னிஸ் அதிகபட்சமாக 72 ரன்களை குவித்து அசத்தினார்.

பின்னர் 258 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது இறுதிவரை போராடியும் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் காரணமாக லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்களது சிறப்பான வெற்றி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் :

LSG

இந்த வெற்றியை பெற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியில் இருந்து இனிவரும் போட்டிகள் அனைத்துமே எங்களுக்கு முக்கியம் என்பதனால் இனி நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்த விரும்புகிறோம். கடந்த போட்டிக்கு பிறகு ஒரு நல்ல ஓய்வு கிடைத்ததால் தற்போது மீண்டும் புதிதாக பலமாக திரும்பி உள்ளோம்.

- Advertisement -

நாங்கள் இந்த போட்டியில் பேட்டிங் செய்யும்போது ஒரு விடயத்தில் மட்டும் கிளியராக இருந்தோம். இதுபோன்ற பேட்டிங் பிட்ச் கிடைத்தால் நிச்சயம் அடிக்க வேண்டும் என்பது மட்டும்தான் எங்களது எண்ணம். இன்று நாங்கள் அடித்த 250 ரன்களே எங்களுடைய ஆட்டத்திற்கான ஒரு சான்று.

இதையும் படிங்க : அவர ஏன் செலக்ட் பண்ணீங்கன்னு பேசுறவங்க 6 மாசம் கிரிக்கெட்டே பாத்துருக்க மாட்டாங்க – ரவி சாஸ்திரி பதிலடி

நிச்சயம் இனி வரும் போட்டிகளிலும் மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப அதிரடியாக விளையாட இருக்கிறோம். எங்கள் அணியில் மேயர்ஸ், ஸ்டாய்னிஸ், பதோனி போன்றோர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இனிவரும் போட்டிகளிலும் இந்த அதிரடியை தொடருவோம் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement