அவர ஏன் செலக்ட் பண்ணீங்கன்னு பேசுறவங்க 6 மாசம் கிரிக்கெட்டே பாத்துருக்க மாட்டாங்க – ரவி சாஸ்திரி பதிலடி

Ravi-Shastri
- Advertisement -

லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூன் 7 முதல் 11 வரை நடைபெறும் வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவை 2வது இடத்தைப் பிடித்த இந்தியா எதிர்கொள்கிறது. கடந்த முறை நியூசிலாந்திடம் விராட் கோலி தலைமையில் ஃபைனலில் தோற்று கோப்பையை நழுவ விட்ட இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் சாம்பியன் பட்டம் வெல்ல போராட உள்ளது. அதற்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திர சீனியர் வீரர் அஜிங்கிய ரகானே தேர்வு செய்யப்பட்டுள்ளது யாரும் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது.

Ajinkya Rahane WTC Final

ஏனெனில் 2011இல் அறிமுகமாகி 2015 உலக கோப்பையில் முக்கிய வீரராக விளையாடிய அவர் நாளடைவில் மெதுவாக பேட்டிங் செய்ததால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து முக்கிய வீரராக விளையாடி வந்த அவர் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டாகி சரித்திர தோல்விகளை சந்தித்து இந்தியா தடுமாறிய போது நாடு திரும்பிய விராட் கோலிக்கு பதிலாக கேப்டனாக செயல்பட்டு சதமடித்து இளம் வீரர்களை அபாரமாக வழி நடத்தி ஆஸ்திரேலியாவை 2 – 1 (4) என்ற கணக்கில் அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

சாஸ்திரி பதிலடி:
ஆனாலும் அத்தொடருக்கு பின் சதமடிக்காமல் தடுமாறிய அவரை கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற இலங்கை தொடருடன் கழற்றி விட்ட தேர்வுக்குழு வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களை நோக்கி நகர்வதாக அறிவித்தது. அதனால் 34 வயதை தாண்டிய அவருடைய கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் சமீபத்திய ரஞ்சிக் கோப்பையில் இரட்டை சதமடித்து ஃபார்முக்கு திரும்பிய ரகானே 2023 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் சரவெடியாக விளையாடி வித்தியாசமான ஷாட்களை அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

அதனால் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக எப்போதுமே வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்டு 10 வருடங்களுக்கு மேல் விளையாடிய அனுபவம் கொண்ட காரணத்தால் ரகானே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் டெஸ்ட் அணிக்கு ஐபிஎல் தொடரில் விளையாடிய செயல்பாடுகளை வைத்து ரகானே தேர்வு செய்யப்பட்டதற்கு முரளி கார்த்திக், ஹர்பஜன் சிங் போன்ற சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த ரஞ்சி கோப்பையில் 600+ ரன்களை அடித்ததுடன் ஐபிஎல் செயல்பாடுகளால் அசத்தியதால் கம்பேக் கொடுத்துள்ள ரகானேவின் தேர்வை விமர்சிப்பவர்கள் கடந்த 6 மாதமாக கிரிக்கெட்டை பார்க்காமல் காட்டுக்குள் இருந்திருப்பார்கள் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் மீண்டும் இந்திய அணியில் வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஐபிஎல் தொடரின் 2 – 3 போட்டிகளில் அழகாக பேட்டிங் அவர் சிறந்த ஃபார்மில் இருப்பதை காட்டினார். அதே சமயம் அவருடைய அனுபவத்தை மறந்து விடாதீர்கள். ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்த போது நீங்கள் இந்த கோணத்தில் தான் பார்க்க வேண்டும். இருப்பினும் 3 போட்டிகளில் விளையாடிய காரணத்தால் ரகானே தேர்வு செய்யப்பட்டதாக சிலர் நினைக்கின்றனர். என்னை கேட்டால் அவர்கள் கடந்த 6 மாதமாக முதல் தர கிரிக்கெட்டை பார்க்காமல் விடுமுறை எடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்”

Shastri

“குறிப்பாக அவர்கள் இந்த உலகின் தொடர்பில்லாமல் காட்டுக்குள் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் 6 மாதங்கள் நீங்கள் விடுப்பில் இருந்தால் தான் 600 ரன்கள் அவர் அடித்ததை பார்த்திருக்க மாட்டீர்கள். மேலும் ஃபைனலில் உங்களுக்கு அனுபவமான வீரர் தேவை. அந்த நிலையில் இரண்டரை வருடங்கள் முன்பாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற மனிதரை நீங்கள் மறக்கக்கூடாது. குறிப்பாக விராட் கோலி இல்லாத போது அவர் அபாரமாக செயல்பட்டார்”

இதையும் படிங்க:PBKS vs LSG : ராகுல் அவுட்டானதால் நிகழ்ந்த வரலாற்று சாதனை மேஜிக் – குரூப்பில் டூப் என கலாய்க்கும் ரசிகர்கள்

“மெல்போர்ன் மைதானத்தில் அடித்த அவருடைய சதத்தை அனைவரும் மறந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். இருப்பினும் அதன் பின் தடுமாறிய அவர் உள்ளூர் மற்றும் கவுண்டி போட்டிகளில் விளையாடி மீண்டும் கம்பேக் கொடுத்த புஜாராவை போல போராடி வந்துள்ளார். எனவே அவருடைய அனுபவம் இந்தியாவுக்கு உதவும் என்று நம்புவோம்” என கூறினார்.

Advertisement