PBKS vs LSG : ராகுல் அவுட்டானதால் நிகழ்ந்த வரலாற்று சாதனை மேஜிக் – குரூப்பில் டூப் என கலாய்க்கும் ரசிகர்கள்

KL rahul LSG
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பரபரப்பான போட்டிகளுடன் மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 38வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதின. மொஹாலியில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய லக்னோ 20 ஓவர்களில் சரவெடியாக செயல்பட்டு 257/5 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கெய்ல் மேயர்ஸ் 54 (24), ஆயுஷ் படோனி 43 (24) மார்கஸ் ஸ்டோனிஸ் 72 (40) நிக்கோலஸ் பூரான் 45 (19) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சரமாரியாக வெளுத்து வாங்கி பெரிய ரன்களை குவித்த நிலையில் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ரபாடா 2 விக்கெட் எடுத்தார். அதை தொடர்ந்து 258 என்ற கடினமான இலக்கை துரத்திய பஞ்சாப்புக்கு அதர்வா டைட் 66 (36) ரன்களும் சிக்கந்தர் ராசா 36 (22) ரன்களும் எடுத்தது தவிர பிரப்சிம்ரன் சிங் 9, கேப்டன் தவான் 1, லிவிங்ஸ்டன் 23, சாம் கரண் 21, ஜிதேஷ் சர்மா 24 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

லக்னோ குரூப்பில் டூப்:
அதனால் 19.5 ஓவரில் பஞ்சாப்பை 201 ரன்களுக்கு அவுட்டாக்கி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக குஜராத்துக்கு எதிரான கடந்த போட்டியில் வெறும் 136 ரன்களை துரத்த முடியாமல் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்பதற்கு கேப்டன் ராகுல் கடைசி வரை அதிரடியை துவக்காமல் தடவலாகவே செயல்பட்டு 68 (61) ரன்கள் எடுத்தாலும் கடைசி ஓவரில் அவுட்டானது முக்கிய காரணமாக அமைந்தது.

அந்த மோசமான தோல்வியிலிருந்து கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இப்போட்டியில் களமிறங்கிய லக்னோவுக்கு ஆரம்பத்திலேயே ராகுல் மீண்டும் வழக்கம் போல 12 (9) ரன்களில் 133.33 என்ற தடவலான ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டானார். ஆனால் இம்முறை அதுவே மிகப்பெரிய சாதகமாக அமைந்தது போல் அடுத்து வந்த அத்தனை பேட்ஸ்மேன்களும் சரமாரியாக அடித்து நொறுக்கியதால் ஐபிஎல் வரலாற்றில் 250 ரன்களை கடந்த 2வது அணியாகவும் 2வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணியாகவும் லக்னோ புதிய வரலாறு படைத்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக அப்போட்டியில் அவர் கடைசி ஓவரில் அவுட்டாகி அழுத்தத்தை ஏற்படுத்தியதால் அடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் ஸ்டோனிஸ், படோனி போன்ற முக்கிய வீரர்கள் அதிரடியாக விளையாட முயற்சித்து அவுட்டானார்கள். இருப்பினும் அதே பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் ராகுல் ஆரம்பத்திலேயே அவுட்டானதால் அழுத்தத்தை அருகில் விடாத அளவுக்கு தங்களுடைய உண்மையான திறமையை வெளிப்படுத்தினர். இதிலிருந்தே கடந்த போட்டியில் தோல்வியை சந்திக்க ராகுல் தான் முக்கிய காரணம் என்பதும் இந்த போட்டியில் பெரிய ஸ்கோர் பதிவு செய்ய அவர் ஆரம்பத்திலேயே அவுட்டானது அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது என்பதும் தெளிவாக தெரிவதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

குறிப்பாக லக்னோ அணியில் டூப் போல செயல்படும் அவரை அடுத்து வரும் போட்டிகளில் அவுட்டாக்காமல் இருப்பதே எதிரணிகள் வெற்றி பெறுவதற்கான வழி என்றும் ரசிகர்கள் கலக்கின்றனர். முன்னாதாக 2018 வாக்கில் இதே போலவே செயல்பட்ட ராகுல் நிலையான இடத்தை பிடித்து இந்திய அணியிலும் துணை கேப்டனாக முன்னேறினார். ஆனால் நாளடைவில் 17 கோடி என்ற உச்சத்தை எட்டிய தன்னுடைய ஐபிஎல் மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற சுயநல எண்ணத்துடன் பெரிய ரன்களை குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து வரும் அவர் தடவலாக பேட்டிங் செய்தது 2022 ஆசிய மற்றும் உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க:PBKS vs LSG : பஞ்சாப்பை குழப்பிய கேஎல் ராகுலின் மாஸ் கேப்டன்ஷிப் – லக்னோ பெரிய வெற்றி, கலாய்க்கும் ரசிகர்கள்

அதனால் துணை கேப்டன்ஷிப் பதவியை இழந்த அவர் மீண்டும் தனது இடத்தை பிடிப்பதற்கு இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியும் கொஞ்சமும் மாறாமல் அதே தடவல் பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களை கடுப்பேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement