நாளைய இரண்டாவது ஒருநாள் போட்டியில் முக்கிய வீரர் விளையாடுவதில் சிக்கல் – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது.

INDvsAUS Toss

- Advertisement -

அதிகபட்சமாக துவக்க வீரர் பின்ச் 114 ரன்களையும், ஸ்மித் 105 ரன்களும், டேவிட் வார்னர் 69 ரன்களை குவித்தனர், இதன் பின்னர் 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டும் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

இந்திய அணி சார்பாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 76 பந்துகளில் 90 ரன்களையும், ஷிகர் தவான் 74 ரன்களும் குவித்தனர். மற்ற யாரும் 30 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஜாம்பா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ind-1

இந்நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஏழாவது ஓவரை வீசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன ஸ்டாய்னிஸ் முதல் இரண்டு பந்துகளை வீசிய பிறகு இடுப்பு பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார். உடனே அன்று இரவு அவருக்கு ஸ்கேன் செய்து அவரது உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது .அதில் காயம் சற்று தீவிரமாக இருப்பது கண்டறியப்பட்டது.

stoinis

இதனால் 2வது ஒருநாள் போட்டியில் அவர் முழுமையாக குணம் அடைந்து திரும்ப முடியாது என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் நாளை துவங்க உள்ள இந்திய அணிக்கு எதிரான 2வது போட்டியில் ஸ்டாய்னிஸ் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement