தனக்கென்று மட்டும் தனியாக ஒரு ஷெப்பை நியமித்து இந்தியாவில் சாப்பிட்டு வரும் ஸ்டாய்னிஸ் – எதற்கு தெரியுமா?

Stoinis
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியானது இதுவரை 6 போட்டிகளில் பங்கேற்று நான்கு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இன்னும் அந்த அணிக்கு மூன்று போட்டிகள் எஞ்சியுள்ள வேளையில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பும் ஆஸ்திரேலிய அணிக்கு பிரகாசமாக காணப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் காயம் காரணமாக அணிக்குள் வருவதும் போதுமாக இருந்து வருகிறார். இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே பெற்று விளையாடிய அவர் இறுதிக்கட்டத்தில் நிச்சயம் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரராக இனி வரும் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதிரடியான பேட்ஸ்மேன் என்பது மட்டுமின்றி மிதவேகப்பந்து வீச்சாளரான அவர் பகுதிநேர பவுலராகவும் அசத்தும் திறனுடையவர். இப்படி ஆல்ரவுண்டராக அசத்தும் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்ஸின் திறன் இன்னும் இந்த தொடரில் முழுவதுமாக வெளிப்படவில்லை. ஆனால் நிச்சயம் இனிவரும் எஞ்சிய போட்டிகளில் அவர் தனது முழு திறனையும் வெளிக்காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடற்தகுதியை விடயத்தில் எப்பொழுதுமே மிகவும் கட்டுக்கோப்புடன் இருக்கும் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் தற்போது இந்தியாவில் உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் வேளையில் தனக்கென தனியாக ஒரு உணவுக்கலை நிபுணரை நியமித்து அவருடனே இந்தியா முழுவதும் பயணித்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

இப்படி அவர் தனி ஒருவருக்காக ஒரு ஷெப்பை நியமிக்க என்ன காரணம்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் தற்போது கீட்டோஜெனிக் டயட் என்கிற அடிப்படையில் உணவுகளை உட்கொண்டு வருகிறாராம். அதில் அதிகளவு கார்போஹைட்ரேட்டை எடுக்காமல் அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை உட்கொள்கிறாராம். இவர் கடைபிடித்து வரும் டயட் சோர்வை போக்கும் வகையிலும், சகிப்புத்தன்மையை அதிகமாக்கும் வகையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அதுல நான் 100% தகுதியுடன் இல்ல.. 4 கிலோ காணாம போய்டுச்சு.. பரிதாப பின்னணியை பகிர்ந்த சுப்மன் கில்

இந்த கீட்டோஜெனிக் டயட்டை பின்பற்றுவதாலே அவரால் மிகச் சிறப்பாக தனது உடற்தகுதியை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடிகிறது என்பதனாலே அவர் இந்த டயட் முறையை பின்பற்றி வருகிறாராம். இதன் காரணமாகவே அவர் தனக்கென தனியாக ஒரு உணவுக்கலை நிபுணரை நியமித்து அவருடனே பயணித்து வருகிறார். அப்படி அவர் நியமித்துள்ள அந்த உணவுகளை நிபுணர் மும்பையை சேர்ந்தவர் என்பதும் அவருக்கு பல நாட்டு உணவு வகைகளிலும் கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement